நம் உடல் சீராக இயங்க கொழுப்புச்சத்து அவசியமான ஒன்றாக இருக்கின்றது.ஆனால் உடலில் அளவிற்கு அதிகமாக கொழுப்பு சேர்ந்தால் அவை பல உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
உடலில் அதிகளவு கொழுப்பு சேர்ந்தால் அவை தோலில் அங்கங்கே கொழுப்பு கட்டிகளாக உருவாகிவிடும்.இவை வலியற்றவை என்றாலும் இயற்கையான முறையில் கொழுப்பு கட்டியை கரைத்துக் கொள்வது நல்லது.
தேவையான பொருட்கள்:
1)எள் எண்ணெய் – 10 மில்லி
2)ஆமணக்கு எண்ணெய் – 10 மில்லி
3)கல் உப்பு – இரண்டு தேக்கரண்டி
4)காட்டன் துணி – ஒன்று
5)ரப்பர் பேண்ட் – ஒன்று
செய்முறை விளக்கம்:
1.முதலில் எள் எண்ணெய் அதாவது நல்லெண்ணெயை ஒரு கிண்ணத்தில் 10 மில்லி அல்லது தங்களுக்கு தேவைப்படும் அளவு ஊற்றிக் கொள்ளுங்கள்.
2.பிறகு 10 மில்லி அளவு விளக்கெண்ணெய் அதாவது ஆமணக்கு எண்ணெய் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
3.பிறகு ஒரு காட்டன் துணியில் கல் உப்பு இரண்டு தேக்கரண்டி அளவு போட்டு மூட்டை கட்டி ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ளுங்கள்.
4.பிறகு இந்த கல் உப்பு மூட்டையை கலந்து வைத்துள்ள எண்ணெயில் போட்டு ஒரு நிமிடம் ஊறவிட வேண்டும்.
5.பிறகு அடுப்பில் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்குங்கள்.அடுத்து கல் உப்பு மூட்டையை தோசை கல் மீது வைத்து சூடுபடுத்துங்கள்.
6.பிறகு இந்த கல் உப்பு மூட்டையை கொழுப்பு கட்டி மீது வைத்து அழுத்தம் கொடுங்கள்.இவ்வாறு தினமும் இருமுறை செய்து வந்தால் கூடிய சீக்கிரம் கொழுப்பு கட்டி கரைந்துவிடும்.
தேவையான பொருட்கள்:
1)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:
1.வாணலி ஒன்றில் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை போட்டு லேசாக வறுத்தெடுக்க வேண்டும்.
2.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடுங்கள்.ஒரு கப் தண்ணீர் சுண்டி அரை கப் அளவிற்கு வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அனைத்து விடுங்கள்.
3.இந்த பானத்தை இரவில் செய்ய வேண்டும்.தயாரான கருஞ்சீரக பானத்தை ஒரு தட்டு கொண்டு மூடி வைக்க வேண்டும்.
4.மறுநாள் காலையில் இந்த பானத்தை அடுப்பில் வைத்து குறைவான தீயில் சூடுபடுத்த வேண்டும்.
5.பிறகு அதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.
6.இந்த பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் கொழுப்பு கட்டி பாதிப்பு சீக்கிரம் குணமாகும்.