குழந்தை வரம் கொடுக்கும் மேஜிக் அரிசி!! ஒரு மாதத்தில் நல்ல விஷயம் சொல்ல இந்த அரிசியை சாப்பிடுங்க!!

Photo of author

By Divya

நம் தென் இந்திய மக்கள் விரும்பி சாப்பிடும் அரிசியில் பல வகைகள் இருக்கின்றது.பொன்னி,மாப்பிளை சம்பா,சிவப்பு அரிசி,கருப்பு கவுனி அரிசி என்று பல வகை அரிசிகளில் உணவு சமைத்து உண்ணப்படுகிறது.

இந்த அரிசியில் நார்ச்சத்து,வைட்டமின்கள்,தாதுக்கள்,புரதம் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் அதிகளவு நிறைந்திருக்கிறது.ஒவ்வொரு அரிசியும் ஒவ்வொரு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.

கருப்பு கவுனி அரிசியை தொடர்ந்து உட்கொண்டால் அதில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பவர்கள் இந்த கருப்பு கவுனி அரிசியை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மாப்பிளை சம்பா அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் புற்றுநோய் அபாயம் குறையும்.மாப்பிளை சம்பா அரிசியில் மெக்னீசியம்,பாஸ்பரஸ்,துத்தநாகம்,இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

எளிதில் செரிமானம் ஆகக் கூடிய அரிசியான காட்டு யானம் அரிசி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.பலவீனமான நம்புகளை பலப்படுத்த உதவும் காட்டு யானம் அரிசியை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.

அதேபோல் பூங்கர் அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் ஹார்மோன் பிரச்சனை சரியாகும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த அரிசியை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

கர்ப்பிணி பெண்கள் இந்த பூங்கர் அரிசியை சாப்பிட்டு வந்தால் தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.பக்கவாதம்,கீல்வாதம் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த கருங்குறுவை அரிசியில் உணவு சமைத்து உட்கொள்ளலாம்.கருப்பை சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள் இந்த பூங்கர் அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

கருப்பு கவுனி அரிசியில் கஞ்சி செய்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.தம்பதியர் இந்த கருப்பு கவுனி அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.