தீராத பித்தத்தை முறிக்கும் மந்திர பானம்!! இதற்கு இந்த பொருட்கள் இருந்தால் போதும்!!

Photo of author

By Divya

உடலில் பித்தம் அதிகரித்தால் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.நமது உடலில் பித்த அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு மூலிகை பானம் தயாரித்து பருகலாம்.

பித்த அறிகுறிகள்:

*நெஞ்செரிச்சல்
*தோல் எரிச்சல்
*உடலில் அதிக வியர்வை சுரத்தல்
*தண்ணீர் தாகம் அதிகரித்தல்
*தோல் அரிப்பு
*செரிமானக் கோளாறு
*மயக்க உணர்வு

தீர்வு 01:

1)இஞ்சி – ஒரு துண்டு
2)வர கொத்தமல்லி – ஒரு தேக்கரண்டி
3)சீரகம் – ஒரு தேக்கரண்டி
4)தேன் – ஒரு தேக்கரண்டி

முதலில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி வர கொத்தமல்லி மற்றும் சீரகம் சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும்.இதை உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு தோல் நீக்கிய இஞ்சி துண்டை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதன் பிறகு இடித்த கொத்தமல்லி கலவையை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு இடித்த இஞ்சி சாறு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் பித்தம் குறையும்.

தீர்வு 02:

1)வர கொத்தமல்லி – ஒரு தேக்கரண்டி
2)சுக்கு – ஒரு துண்டு
3)கரு மிளகு – கால் தேக்கரண்டி
4)ஏலக்காய் – ஒன்று
5)தேன் – ஒரு தேக்கரண்டி

பாத்திரம் ஒன்றை எடுத்து அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதை,ஒரு துண்டு தோல் நீக்கி இடித்த சுக்கு,கால் தேக்கரண்டி கரு மிளகு மற்றும் ஒரு இடித்த ஏலக்காய் சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும்.

பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரை கப் அளவிற்கு வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேவையான அளவு தேன் சேர்த்து பருகி வந்தால் உடலில் பித்த அளவு குறையும்.

தீர்வு 03:

1)இஞ்சி – ஒரு துண்டு
2)எலுமிச்சம் பழம் – பாதியளவு
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு பாதி எலுமிச்சம் பழத்தை மெல்லிய வடிவில் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி இடித்த இஞ்சி துண்டுகளை போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த எலுமிச்சை துண்டுகளை அதில் போட்டு இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

அதன் பிறகு இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் உடலில் பித்த அளவு கட்டுப்படும்.