மார்பிங் புகைப்படத்தை அனுப்பிய முக்கிய பாஜக புள்ளி! வைரலாகும் ட்விட்டர் சர்ச்சை!

Photo of author

By Rupa

மார்பிங் புகைப்படத்தை அனுப்பிய முக்கிய பாஜக புள்ளி! வைரலாகும் ட்விட்டர் சர்ச்சை!
சமீபகாலமாக பாஜக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இந்த சர்ச்சைகளில் இருந்து வெளியே வரவும் மேலும் மக்களை சமாளிக்கவும் பல கருத்துக்களை கூறி வருகிறது. குறிப்பாக பெகாசஸ் உளவு மென்பொருள் மோடி பயன்படுத்தியது குறித்து ஆதாரபூர்வமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தக்க பதில் அளிக்காமல் மோடி காலதாமதம் செய்து வருகிறார். இந்த பெகாசஸ் குறித்த இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு இடையில் அவ்வப்போது பாஜக பிரமுகர்களும் பல இன்னல்களில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் பாஜக எம்பி மற்றும் நடிகர் ரவி கிஷன். இவர் முதன் முதலில் இந்தி திரைப்படமான பீதாம்பர என்ற படத்தில் நடித்தார்.

பின்பு பல ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த சம்பளம் என்ற தமிழ் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகர் மற்றுமின்றி உத்தர பிரதேச பாஜக எம்பி ஆக பதவி வகித்துள்ளார். தற்பொழுது பாஜக எம்பி மற்றும் நடிகருமான ரவி கிஷன் மீது காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் பதக் என்பவர் பாலியல் தொல்லை குறித்து போலீசில் அவர் மீது புகார் அளித்துள்ளார். தற்பொழுது 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்று முடிந்தது.

அதில் நொய்டாவில் காங்கிரஸ் அதிக வாக்குகளை பெற நட்சத்திர பேச்சாளர் தங்கத் அவரது ஈடுபாட்டை காட்டினார். அதை பிடிக்காத இதர கட்சியினர் அவரை பழிவாங்கும் நோக்கில் பல திட்டங்களை தீட்டி உள்ளனர். தற்பொழுது வாக்கு சேகரிக்கும் நேரத்தில் ஏதேனும் பழிவாங்கும் நோக்கத்தில் செய்தால் அந்த அந்த கட்சிக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என்று எண்ணி வாக்குப்பதிவு முடியும் வரை காத்திருந்து உள்ளனர். அவ்வாறு நொய்டாவில் வாக்குப்பதிவு முடிந்தது. அவ்வாறு முடிந்த அடுத்த நாளே செலிபிரிட்டி பேச்சாளரான பங்குரி பதக் அவரின் ட்விட்டர் கணக்கிற்கு நூற்றுக்கணக்கான வேறொரு கணக்குகளில் இருந்து ஆபாச கருத்துக்கள் மற்றும் மார்பிங் புகைப்படம் போன்றவை இவருக்கு அனுப்பியுள்ளனர்.

இதுபோல பல நூற்றுக்கணக்கான கணக்குகளில் இருந்து இவ்வாறு வந்ததா இவர் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். ஆனால் இந்த கணக்குகளில் பாஜக எம்பி ரவி கிஷன் உபயோகம் செய்யும் ட்விட்டரில் இருந்து மார்பிங் செய்யப்பட்ட ஆபாச திரைப்படங்கள் இவருக்கு அனுப்பியுள்ளார். அதுமட்டுமின்றி ஆபாசமான குறுஞ்செய்திகளும் இவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற புகைப்படங்களை நீக்கவேண்டும் என்றால் ஒரு லட்சம் வரை தனக்கு கொடுக்க வேண்டுமென்று பணம் கேட்டு பாஜக எம்பி மற்றும் நடிகருமான ரவி கிஷன் நட்சத்திர பேச்சாளர் பெண்மணியை மிரட்டியுள்ளார். யார் பணத்தை தர மறுத்த தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில் அவர் பாஜக எம்பி மற்றும் நடிகருமான ரவி கிஷன் அவரது ட்விட்டர் கணக்கில் இருந்து மார்பின் புகைப்படத்தை அனுப்பி அதனை நீக்க வேண்டும் என்ற ஒரு லட்சம் தரவேண்டும் என்று மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார். மேலும் அவர் கூறியது, பாஜகவிற்கு எதிராக பேசப்படும் பெண்கள் அனைவரும் புகைப்படத்தையும் மார்பிங் செய்து இது போன்ற போலி கணக்குகளில் இருந்து அந்தப் பெண்மணிகளின் கணக்கிற்கு அந்த புகைப்படத்தை அனுப்புவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதனால் பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். தற்போது அது அந்த செயல் எனக்கும் அரங்கேறியுள்ளது. இவ்வாறு செய்பவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு காவல்துறை ஆணையர் விருந்தா சுக்லா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் நட்சத்திர பேச்சாளர் பங்குரி பதக் அளித்துள்ள புகார் தற்பொழுது சைபர் செல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்று தகவலை தெரிவித்துள்ளார்.