TRP ரேட்டிங்கில் திடீரென இறங்கிய முக்கிய சேனல்

Photo of author

By Parthipan K

TRP ரேட்டிங் என்பது ஒவ்வொரு டிவி சேனலுக்கும் உரிய தகுதியை நிர்ணயிப்பது ஆகும். அந்த வகையில் தொடர்ந்து நம் சினி உலகம் பார்வையாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் தவறாமல் தொலைக்காட்சிகளின் டாப் 5 TRP ரேட்டிங்கை தெரிவித்து வருகிறோம். தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் முன்னணியில் இருக்கும் டிவிகள் என்றால், சன் டிவி, ஸ்டார் விஜய் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளை கூறலாம்.

சென்ற வாரம் TRP ரேட்டிங்கில் 448388 பார்வையாளர்களை கொண்டு 3ஆம் இடத்தை பிடித்துள்ளது ஸ்டார் விஜய் தொலைக்காட்சி. இதனால் நன்றாக போய்க்கொண்டிருந்த விஜய் தொலைக்காட்சியில் TRP ரேட்டிங் கொஞ்சம் கீழே சரிந்துள்ளது. மேலும் 467926 பார்வையாளர்களை கொண்டு 2ஆம் இடத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சியும், 835106 பார்வையாளர்களை கொண்டு சன் டிவி முதல் இடத்தையும் பிடித்துள்ளது.