மணிப்பூர் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி வீட்டிற்கு தீ வைத்த சொந்த கிராம பெண்கள்!!
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர்கள் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் போராட்டம் நடத்தினார். அதனையடுத்து மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை சம்பவம் இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தியது.
மேலும் இது குறித்து தீவிர விசாரணை செய்யுமாறு போலீசாருக்கு முதல் மந்திரி பிரேன் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். பெண்களுக்கு எதிரான இந்த கொடூரமான வன்கொடுமை சம்பவத்திற்கு பெண்களும் , கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதனை தொடர்ந்து சம்பவத்தின் முக்கிய குற்றவாளியை என்று போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான ஹீய்ரேம் மேய்தோ வீட்டை சொந்த கிராம மக்களே அடித்து நொறுக்கி உள்ளார்கள். இந்த பெண்கள் வன்கொடுமை ஒட்டுமொத்த மைதேயி சமூக மக்களுக்கும் அவமானத்தை தேடி தந்துள்ளதாக கூறுகிறார்கள். மேலும் குற்றவாளியின் வீட்டை பெண்கள் அடித்து, தீயிட்டு கொளுத்தி உள்ளார்கள். இந்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.