சைபர் க்ரைம் கொடுத்த முக்கிய மெசேஜ்.. பழைய 5 ரூபாய் நோட்டு கொடுத்தால் ரூ 4 லட்சம்!!

Photo of author

By Rupa

Pondicherry: சமூக வலைத்தள பக்கத்தில் வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாமென சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

சமூக வலைத்தளத்தில் அதிகப்படியான குளறுபடிகள் நடந்த வண்ணமாகத்தான் உள்ளது. இதுகுறித்து போலீசார் உட்பட தற்போது வரை விழிப்புணர்வு அளித்து தான் வருகின்றனர்.இருப்பினும் ஓர் சில மக்கள் பல விளம்பரங்களை பார்த்து பணத்தை இழந்தும் வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் புதுச்சேரியை சேர்ந்தவர் பழைய இந்திய நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கு பணம் தருவதாக ஆன்லைனில் வந்த விளம்பரத்தை நம்பி ஏமாற்றம் அடைந்துள்ளார். கிட்டத்தட்ட இதன் மூலம் 35 ஆயிரம் ரொக்க பணத்தையும் இழந்துள்ளார்.

முதலில் பழைய ரூபாய் நோட்டுக்கள் கொடுத்தால் உங்களுக்கு ரூ 4  லட்சம் அல்லது 5 லட்சம் கிடைக்குமென ஆசையை தூண்டும் நோக்கில் விளம்பரம் செய்துள்ளனர். இதை பார்த்த ராஜேஷ் அவர்களிடம் பேசியுள்ளார். மேற்கொண்டு என்னிடம் 5 ரூபாய் நோட்டானது ஐந்து ஆண்டுகள் பழையது இருக்கிறது என கூறியுள்ளார். அந்த மோசடி கும்பல் நாங்கள் அதனை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி விட்டு உங்களது காசானது பழமையானது தான் ரூ 4 லட்சம் அதற்கு தருவதாக கூறியுள்ளனர். மேற்கொண்டு ஜிஎஸ்டி போன்றவைக்காக முதலில் நீங்கள் பணம் அனுப்ப வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.

இவரும் அதை நம்பி முதலில் அவர்கள் கேட்ட 25 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார். இதனையடுத்து மேற்கொண்டு அவர்கள் பத்தாயிரம் கேட்டுள்ளனர், அதையும் அனுப்பி வைத்துள்ளார். பணம் பெற்றுக்கொண்ட பிறகு அவர்களிடமிருந்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அவர் ஏமாற்றமடைந்ததை அடுத்து பின்பு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தற்பொழுது விசாரணை செய்து வருகின்றனர். மேற்கொண்டு இவ்வாறு ஏமாற வேண்டாமென எச்சரித்துள்ளனர்.