(EPFO) தொழிலாளர் வருங்கால வைப்பதில் பணம் சேமித்து வைத்து மீண்டும் பணம் எடுப்பதில் எடுக்கப்பட்ட சிக்கல்கள் களையப்பட்டு இருப்பதாக தொழிலாளர் நல வாரியத்தின் தரப்பில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
வருங்கால வைப்பு நிதி தொகையை எடுப்பதில் இருந்த முக்கிய சிக்கல்கள் ஆன ரத்து செய்யப்பட்ட காசோலை மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் இணைப்பு போன்றவை இனி இணைக்கப்பட தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கிய முடிவானது உரிமை கோரல் தீர்வு முறையை உயர்த்துவதற்காக எடுக்கப்பட்ட இருப்பதாகவும், இதனால் இனி PF ஊழியர்கள் தங்களுடைய உரிமை கோரல்களுக்காக போராட வேண்டிய அவசியம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, மே 28 2024 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட திட்டத்தின் மூலம் இதுவரை 1.72 கோடி பிஎஃப் ஊழியர்கள் பயன் பெற்று இருப்பதாகவும், இந்த முக்கிய நடவடிக்கையின் மூலம் இனி அதிகப்படியான ஊழியர்கள் பயன்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பலருக்கு தங்களுடைய பிஎஃப் பணம் பெறுவதில் ரத்து செய்யப்பட்ட காசோலைகளை சமர்ப்பித்தல் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்களின் வரவுகளை பதிவு செய்தல் போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும், இதனால் பி எஃப் பணத்தை பெறுவதில் சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவித்து நிலையில் உரிமை கோரல் மூலமாக அவற்றை ரத்த செய்ய இருப்பதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.