பெற்றோர்கள் மற்றும் காதலியை கொலை செய்த நபர்! வீட்டு தோட்டத்தில் புதைத்த கொடூரம்! 

0
152

பெற்றோர்கள் மற்றும் காதலியை கொலை செய்த நபர்! வீட்டு தோட்டத்தில் புதைத்த கொடூரம்! 

தாய், தந்தை மற்றும் காதலியை அடுத்தடுத்து கொலை செய்த நபர் அவர்களை வீட்டு தோட்டத்தில் புதைத்த அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது.

மேற்கு வங்காளத்தின் பங்குரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆகான்கிஷா  என்கிற சுவேதா. இவருக்கு சமூக வலைதளம் மூலம் 2007 ஆம் ஆண்டு உதியன் தாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மாறியது. 9 ஆண்டுகளுக்குப் பின்பு வீட்டை விட்டு வெளியேறிய சுவேதா போபால் நகரில் சாகேத் பகுதியில் வேலைக்காக சென்றவர் அப்படியே உதியனுடன் சேர்ந்து வாழ தொடங்கினார்.

ஆனால் சுவேதாவின் குடும்பத்தினரிடம் தான் அமெரிக்காவில் வேலை பார்ப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின்பு சுவேதாவை அவர்களது குடும்பத்தினரால் தொடர்பு கொள்ள இயலவில்லை. செல்போன் எண்ணை வைத்து தேடியதில் அது போபால் நகரை அடையாளம் காட்டியுள்ளது. உதியனுடன் இருந்த தொடர்பால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுவேதாவை காணவில்லை என போலீசாரிடம் புகார் செய்தனர்.

போலீசார் விசாரணை மேற்கொண்டதில் உதியன் சுவேதாவை கொலை செய்ததும் அவரை வீட்டின் படுக்கையறையில் புதைத்து வைத்து மேலே சிமெண்ட் பூசி அடையாளம் தெரியாதபடி மாற்றியதும் தெரிய வந்தது. அதன்படி 2017 ஆம் ஆண்டு போலீசார் உதியனுக்கு எதிராக 600 பக்க குற்ற பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.  19 சாட்சிகளின் அடிப்படையில் உதியனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனாலும் உதியன் மேல் உள்ள சந்தேகம் தீராத போலீசார் தொடர்ந்து விசாரணை செய்தனர்.  அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில் 2010 ஆம் ஆண்டு தாயார் இந்திராணி மற்றும் தந்தை வி.கே.தாஸ் ஆகிய இருவரையும் படுகொலை செய்தது தெரிய வந்தது. அவர்களின் உடல்களை சதீஷ்கர் மாநிலம் ராயப்பூர் மாவட்டத்தில் உள்ள டிடி நகரில் உள்ள தனது வீட்டு தோட்டத்தில் புதைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கொலைக்கான காரணங்கள் போலீஸாரால் வெளியிடப்படவில்லை. மேலும் உதியனிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Previous articleபயங்கரவாத விதைகளை நாங்கள் விதைத்துள்ளோம்! பாதுகாப்பு துறை மந்திரி வேதனை! 
Next articleஒரு தீயில் மனைவி பெற்றோர் உயிரைக் கொடுத்து மற்றோர் அக்னி முன்பு மகள் வாழ்வை மலரச் செய்த தந்தை!  கல் மனதையும் கரைத்த நிகழ்வு!