திருப்பத்தூர் கோவிலில் திருடப்பட்ட ஓலைச்சுவடிகள்!! கண்டெடுத்து பணியாற்றும் தமிழக அரசு!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய கொரட்டி என்னும் கிராமத்தில் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலில் சோலை சுவடிகள் 2015 ஆம் ஆண்டு திருடப்பட்டதாகவும் அதன் பின் அதனை பத்திரமாக மீட்டு ஒருவர் பாதுகாத்து வந்ததாகவும் அவரிடம் இருந்து கள ஆய்வின் மூலமாக தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறை பெற்று உலக தமிழ் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்களின் படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு அவர்கள் மீட்டெடுக்கப்பட்ட ஓலைச்சுவடிகளை உலக தமிழாராய்ச்சி மையத்திற்கு தமிழாக்கம் செய்வதற்காகவும் ஓலைச்சுவடிகளில் உள்ளவற்றை இப்பொழுது இருக்கக்கூடிய தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்த அதனை புத்தகங்களாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய திருக்கோவில்கள் பேரரசர்களால் நமக்கு கொடுத்து செல்லப்பட்ட பரிசுகள் என்றும் அவற்றின் பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றை பேணி காத்தல் தமிழர்களின் உடைய பொறுப்பு என்றும் தெரிவித்ததோடு இந்த ஓலைச்சுவடிகளை நூல்களாக மாற்றுவதன் மூலம் எதிர்கால பிள்ளைகள் நம்முடைய பேரரசர்கள் பற்றியும் தமிழர்களின் பண்பாடு கலாச்சாரங்கள் போன்றவற்றையும் அறிந்து கொள்வதற்கு எளிமையாக அமையும் என்று உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை முதுநிலை ஆராய்ச்சியாளர் முனைவர் சு. தாமரைப்பாண்டியன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பு :-

தமிழகத்தை பொறுத்தவரை திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்பு இதுவரை 979 திருக்கோவில்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இருப்பதாகவும் அதில் தற்பொழுது வரை 31 கோவில்களில் 212,585 ஓலைச்சுவடிகள், 22 செப்பேடுகள், 67 செப்பு பட்டயங்கள், 2 வெள்ளி செப்பேடு, 1 தங்க செப்பேடு மற்றும் 365 இலக்கிய சுவடிகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்ட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.