நாமக்கல் மாவட்டம் சேலம் நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் முருகன் கோயில் பேருந்து நிலையம் பகுதியில் கருப்புசாமி என்பவரது மனைவி உள்பட குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் அந்தப் பகுதியில் கோழி வியாபாரம் செய்து வருகின்றார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சென்ற வாரம் மனைவியுடன் வெளியூர் போய் இருந்ததாக சொல்கிறார்கள் அவர் திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு ரூபாய் 12000 கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது0 இன்னொரு பீரோவைத் திறக்க முடியாத காரணத்தால் அதில் இருந்த நகைகள் தப்பி இருக்கின்றன.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கருப்புசாமி காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். இந்த வழக்கில் மோகனூர் அருகே சந்தேகத்திற்கு இடம் பெறுகின்ற வகையில் சுற்றித் திரிந்த 6 பேரை கைது செய்து விசாரணை செய்தார்கள் அதில் மற்றுமொரு அதிர்ச்சி தகவல் தெரிய வந்திருக்கிறது.
கைதானவர்களில் மோகனூரைச் சார்ந்த வெங்கடாசலம் சரண்குமார் விக்னேஷ் என்ற மூன்று நபர்களும் வித்தியாசமான விதத்தில் பல இடங்களில் கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது. மோகனூர் சுற்றுவட்டார பகுதியில் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு வந்திருக்கிறார்கள். அதன்பிறகு தகவல்களை உறுதிசெய்து கொண்டு வீட்டில் பெண்கள் தனியே இருக்கும் நேரம் பார்த்து திருமண பத்திரிக்கை வைப்பது போல அந்த வீட்டிற்குள் நுழைந்து விடுவார்களாம்.
திருமண பத்திரிக்கை என்றால் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள் என்ற காரணத்தால், இந்த விதத்தில் வீட்டிற்குள் நுழைந்து விடுவார்கள் என்று கூறுகிறார்கள்0 அப்படி நுழைகையில் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென்று கத்தியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டுவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று விடுவார்களாம். இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்திருக்கிறார்கள்0 அதோடு வேறு எங்கெல்லாம் இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டார்கள் என்று விசாரணை நடைபெற்று வருகின்றன.