கொடிய நோய்களை விரட்டும் கொடுக்காப்புளி!! இதன் அருமை தெரியாமல் இருந்துவிட்டோமே!!

Photo of author

By Divya

கொடிய நோய்களை விரட்டும் கொடுக்காப்புளி!! இதன் அருமை தெரியாமல் இருந்துவிட்டோமே!!

Divya

நம் ஊர் பழங்கள் என்றாலே அதற்கு தனி சிறப்பு மற்றும் தனி ருசி இருக்கிறது.சில பழங்கள் என்றாலே இருவகை சுவை தான் கொண்டிருக்கும்.காயாக இருக்கும் பொழுது கசப்பு,துவர்ப்பு அல்லது புளிப்பு சுவையையும் பழுத்த பிறகு இனிப்பு சுவையையும் கொண்டிருக்கும்.மூன்று வகை சுவை கொண்ட பழம் ஒன்று இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் நாம் சிறு வயதில் விரும்பி சாப்பிட்ட கொடுக்காப்புளியில் தான் பிஞ்சில் துவர்ப்பான சுவை,பழுத்ததும் இனிப்பான சுவை மற்றும் நன்றாக பழுத்த பிறகு சற்று புளிப்பு சுவை நிறைந்திருக்கிறது.

கொடுககாப் புளி பழம் மட்டுமின்றி அதன் பூ,இலை என்று அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.கொடுக்காபுளியை கோணல்புள்ளியங்காய்,ஜங்கிள் ஜிலேபி என்று பல பெயர்களில் அழைக்கின்றனர்.

கொடுக்காப்புளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

1)நார்ச்சத்து 2)கால்சியம் 3)பாஸ்பரஸ் 4)இரும்புச்சத்து 5)பொட்டாசியம் 6)நீர்ச்சத்து 7)புரதச்சத்து 8)வைட்டமின் பி 9)வைட்டமின் கே 10)வைட்டமின் ஏ 11)சோடியம்

கொடுக்காப்புளியில் அடங்கியுள்ள நன்மைகள்:-

**உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது.இந்த கொடுக்காப்புளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் உடல் எடை பராமரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது.

**கொடுக்காப்புளி இலைகளில் உள்ள சைட்டோடாக்ஸிக் எனும் பண்பு புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடுகிறது.

**கொடுக்காப்புளி பழத்தை சாப்பிட்டு வந்தால் குடல் சார்ந்த பாதிப்புகள் முழுமையாக குணமடையும்.

**கொடுக்காப்புளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் அரிப்பு,அலர்ஜி,வீக்கம்,தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

**கொடுக்காப்புளியை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

**சர்க்கரை நோயாளிகள் கொடுக்காப்புளியை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு பாதிப்பு குறையும்.கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் அகல கொடுக்காப்புளியை உட்கொள்ளலாம்.

**இந்த பழத்தில் கால்சியம் சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இந்த கொடுக்காப்புளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.கொடுக்காப்புளி இலைகள் காசநோய்க்கு மருந்தாக திகழ்கிறது.

** வயிற்றில் உள்ள அமிலம் குறைய கொடுக்காப்புளியை உட்கொள்ளலாம்.வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாக இந்த கொடுக்காப்புளியை சாப்பிடலாம்.