சமீபத்தில் வெளிவந்த 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் வருமான வரியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதில் வருமான வரியின் சிக்கி தவித்த நடுத்தர மக்கள் பலர் அத்தரவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த வரி சலுகைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்பு காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் தான் நடுத்தர மக்கள் மற்றும் சாதாரண சம்பளம் வாங்குபவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பலர் அவர்கள் சம்பள காசில் குடும்பத்தை நடத்துவதற்கு அவதிப்பட்ட நிலையில், இந்த தளர்வு அவர்களுக்கு பெரும் விடுதலையாக அமைந்திருக்கிறது. தணிக்கையாளர்களை அமர்த்தி வருமான வரி சமர்ப்பிக்கும் நிலையை மாற்றி அமைக்க இச்சலுகை பெரிதும் உபயமாக இருக்கும். 20 ஆண்டுகளுக்கு மேல் சிக்கி தவித்த நடுத்தர மக்களுக்கு சமீபத்தில் மத்திய அரசு தீர்வு கண்டுள்ளது.
நடுத்தர மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு ஒரு வழியாக தற்சமயம் பலன் கிடைத்துள்ளது. இந்த தளர்வு ஒரு கோடி மக்களை விடுவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் 24.8% ஆக இருந்த ஏழைகளின் எண்ணிக்கை, 2021 ஆம் ஆண்டில் 14.9% ஆக குறைந்துள்ளது. பலர் முன்னணி நடுத்தர வர்க்கமாக மாறி உள்ளனர். இரண்டு லட்சம் முதல் 10 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறும் மக்கள் நடுத்தர வர்க்கத்தினர் என்று அழைக்கப்படுகின்றனர். நடுத்தர வாக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.