தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கும்பகோணம் அருகில் இருக்கின்ற அய்யாவாடி பிரித்திங்கரா தேவி கோவிலுக்கு சென்று நிகும்பலா யாகத்தில் பங்கேற்று ரகசிய பூஜை செய்திருக்கிறார்.
அவர் இது தொடர்பாக கும்பகோணம் சென்ற தகவல் அதிமுகவின் பெரிய புள்ளிகள் யாருக்கும் தெரியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் ஒருசில நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்த உடனேயே விரைவாகச் சென்று அவருடன் இணைந்து தரிசனம் மேற்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிகும்பலா யாகத்தில் பங்கேற்றால் எதிரிகளின் தொந்தரவு விலகிவிடும், இழந்தவையும் திரும்பப் பெறலாம் என்பது ஐதீகம். அந்த விதத்தில் ஜெயலலிதா, மற்றும் சசிகலா ,போன்றோர் இங்கே வழிபட்டு இருக்கிறார்கள் அதற்குப் பிறகு ஜெயலலிதா மறுபடியும் முதலமைச்சர் ஆனார்.
சசிகலா அவர்களால் அதிமுகவில் இருக்கக்கூடிய பலர் பதவிக்கு வந்து இருக்கிறார்கள். அந்தவகையில் ராஜேந்திரபாலாஜி அவர்களும் சசிகலா அவருக்கு ஆதரவாக உரையாற்றி இருக்கிறார். இந்தநிலையில், சசிகலாவுக்காக ரகசியமாக கோவிலுக்குச் சென்று அவர் அந்த யாகத்தில் பங்கேற்றதாக தெரிகிறது. சசிகலா எது நினைத்தாலும் நடக்க வேண்டும். அதோடு அவருக்கும் எதிர்வரும் தேர்தலில் சீட் கிடைக்க வேண்டும். என்று நினைத்து அவர் வழிப்பட்டு இருக்கலாம் என்று ஒரு சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன.