சாதாரண காயங்கள் ஏற்பட்டால் அவை சில தினங்களில் குணமாகிவிடும்.ஆனால் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு சாதாரண புண்கள் கூட பெரிய பாதிப்பை உண்டாக்கிவிடும்.சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு உடலில் காயங்கள்,புண்கள் ஏற்பட்டால் உடனடி மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இல்லையேல் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சேர்த்துவிடும்.சர்க்கரை நோய் புண்களை குணமாக்கி கொள்ள ஊமத்தை இலை மற்றும் ஊமத்தை பூவை மருந்தாக பயன்படுத்துங்கள்.
1)நல்லெண்ணெய்
2)ஊமத்தை பூ
3)ஊமத்தை இலை
50 மில்லி நல்லெண்ணெய்யை வாணலி ஒன்றில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு ஒரு ஊமத்தை பூ மற்றும் இரண்டு ஊமத்தை இலையை மைய்ய அரைத்து சூடாகி கொண்டிருக்கும் நல்லெண்ணெயில் சேர்க்க வேண்டும்.
இவற்றை நன்றாக காய்ச்சி ஆறவைத்து சர்க்கரை புண்கள் மீது பூசி வந்தால் அவை சீக்கிரம் குணமாகும்.சாதாரண புண்களையும் இந்த மூலிகை எண்ணெய் குணப்படுத்தும்.
1)தேங்காய் எண்ணெய்
2)ஊமத்தம் பூ
அடுப்பில் வாணலி வைத்து 50 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் நான்கு ஊமத்தம் பூவை போட்டு தைலம் போல் காய்ச்ச வேண்டும்.இதை ஆற வைத்து சர்க்கரை புண்கள் மீது தடவினால் சில தினங்களில் குணமாகிவிடும்.
1)ஊமத்தை இலை
2)மஞ்சள் தூள்
3)ஊமத்தை பூ
முதலில் ஊமத்தை இலை மற்றும் ஊமத்தை பூவை சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைக்கவும்.
அதன் பிறகு இந்த கலவையில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் செய்து சர்க்கரை நோய் புண்கள் மீது தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
1)ஊமத்தை இலை
2)ஊமத்தை பூ
முதலில் ஊமத்தை இலை மற்றும் ஊமத்தை பூ சம அளவு எடுத்து வெயிலில் நன்றாக உலர்த்திக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பொடியை சர்க்கரை நோய் புண்கள் மீது தடவினால் புண் சீக்கிரம் குணமாகிவிடும்.