25 ஆண்டுகள் கழித்து நடந்த அதிசயம்! வெற்றி வாகை சூடிய பாஜக!
தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த 6-ம் தேதி 234 தொகுதிகளிலும் நடைபெற்றது.முடிவுகளை நோக்கி பெருமளவு மக்கள் காத்திருந்தனர்.இந்த தேர்தலின் முடிவானது நேற்று வெளியானது.வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக முன்னிலை வகித்தது.இறுதியில் திமுக 133 இடங்களில் முன்னிலை வகித்து வெற்றிபெற்றது.இதில் பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது.25 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பாஜக வென்றது இதுவே முதல் முறையாகும்.
அந்தவகையில் தற்போது பாஜக தரப்பில் 4 எம்எல்ஏ க்கள் உள்ளனர்.இதனால் பஜாகவின் ஓட்டு சதவீதமும் அதிகரித்துள்ளது.கோவை தெற்கு தொகுதியில் கமலுக்கு எதிராக போட்டியிட்ட வானதி சீனிவான்,திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன்,நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தி,மொடக்குறிச்சி தொகுதியில் சி.கே.சரஸ்வதி ஆகியோர் எம்எல்ஏ-வாக வெற்றி அடைந்துள்ளனர்.பாஜக 20 இடங்களில் போட்டியிட்டது.இதில் நான்கு இடங்களில் வெற்றியை கண்டுள்ளது.
இந்த 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.அந்த 5 மாவட்டங்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு பிரதமர் நரேந்த்திரமோடி அவரது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து சொன்னார்.அதுமட்டுமின்றி 5 மாநிலங்களுக்கும் அவர்களின் மொழிகளிலே மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.குறிப்பாக தமிழக மக்களுக்கு தமிழில் நன்றியை தெரிவித்தார்.அவர் டிவிட்டரில் கூறியது,தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
மாநில நலனுக்காகவும் பெருமைமிகு தமிழ் பண்பாட்டை மென்மேலும் பறைசாற்றவும் நாங்கள் பெருமளவு பாடுபடுவோம் என்று தமிழக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்.கடினமாக போராடிய தொண்டர்களை பாராட்டுகிறேன் என்றார்.பிரதமரை அடுத்து அமித்ஷாவும் தமிழக மக்களுக்கு அவரது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரவித்திருந்தார்.மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் வெற்றி பெற்ற 4 வேட்பாளருக்கு தமிழில் அவரது வாழ்த்தை தெரிவித்திருந்தார்.