கருத்தரிக்கும் திறனை குறைக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் எனும் அரக்கன்!! இதனால் என்னென்னெ ஆபத்து வரும்?

நமது கண்னுக்கு தெரியாத அளவில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுகிறது.இவை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் கலக்கப்படுகிறது.இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள் கலக்கப்பட்ட உணவுப் பொருளை சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன ஆபத்து ஏற்படும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

மைக்ரோ பிளாஸ்டிக் தீமைகள்:

1)இந்த துகள் கலக்கப்பட்ட உணவுப் பொருட்களை பயன்படுத்தினால் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டுவிடும்.

2)மைக்ரோ பிளாஸ்டிக் துகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள் இதய ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.

3)மைக்ரோ பிளாஸ்டிக் கலக்கப்பட்ட பொருட்களை உட்கொண்டால் மூளையின் செயல்திறன் குறைந்துவிடும்.

4)தற்பொழுது பெரும்பாலான உணவுப் பொருட்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.இந்த உணவை உட்கொள்ளும் பெண்களுக்கு கருத்தரிக்கும் திறன் குறைய வாய்ப்பிருக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

5)நுரையீரல் ஆரோக்கியத்தை மைக்ரோ பிளாஸ்டிக் பாதித்துவிடும்.இதனால் சுவாசம் சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

6)தொடர்ந்து மைக்ரோ பிளாஸ்டிக் கலந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டால் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகும் அபாயம் உள்ளது.

இந்த மைக்ரோ பிளாஸ்டிக் அபாயத்தில் இருந்து மீள உணவுப் பொருட்களை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்.சர்க்கரை,டூத் பேஸ்ட் போன்ற பொருட்களில் மைக்ரோ பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.எனவே இது போன்ற பொருட்களை பயன்படுத்தும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும்.