போதைப்பொருள் கலந்த பானத்தை கொடுத்து இளம்பெண்ணை சீரழித்த அரக்கர்கள்!..

போதைப்பொருள் கலந்த பானத்தை கொடுத்து இளம்பெண்ணை சீரழித்த அரக்கர்கள்!..

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தின் மோடி நகரில் பிறந்தநாள் விழாவில் ஒரு இளம்பெண் பங்கேற்றார்.அவருடைய வயது 19. மூன்று இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

அதே பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது.இந்நிறுவனத்தில் அந்த இளம்பெண் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அந்த நிறுவனத்தில் ஒரு விருந்து அழைப்பிதல் வந்தது .அந்த விருந்தில் அந்த இளம் பெண் கலந்து கொண்டார்.

அப்போது யாரோ ஒருவர்  போதைப்பொருள் கலந்த பானத்தை கொடுத்ததாக அந்த இளம்பெண் போலீசாரிடம் கூறினார்.
மயக்கமடைந்த பெண்ணை  அறைக்கு தூக்கிச் சென்று மூன்று  நண்பர்கள் மாறி மாறி பலாத்காரம் செய்ததாக போலீசார் மூலம் தெரிய வந்தது.

இந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி அந்த பெண்ணை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதைதொடர்ந்து  அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீஸ் அதிகாரியிடம் கூறினார்.
வீட்டிற்கு வந்த சிறுமி தனது குடும்பத்தினரிடம் நடந்த சம்பவம் பற்றி கூறி கதறி அழுதுள்ளார்.

பின்னர் அவர் தனது தந்தையுடன் மோடிநகர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார். சேகர், கிருஷ்ணா மற்றும் அர்ஜுன் ஆகியோர் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அவர்களை போலீசார் கைது செய்து தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.