‎அருவாமனையால் குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்!பதற வைக்கும் சம்பவம்!

Photo of author

By Kowsalya

‎அருவாமனையால் குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்!பதற வைக்கும் சம்பவம்!

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த கீழ்சிறுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கலையரசன்.

இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு ஒரு மகள் நிவேதா. தனது ஒரே மகளான நிவேதாவைத்தான் சுகன்யா துடிதுடிக்க அருவாமனையால் அறுத்து கொன்றுள்ளார்.

கடந்த ஆண்டு கலையரசனின் தாயார் திடீரென தூக்குப்போட்டு இறந்துள்ளார். இதனை சுகன்யா தான் முதலில் பார்த்துள்ளார். எனவே அன்றையிலிருந்து மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என கூறுகிறார்கள்.

அதன் பின்னர் திடீர் திடீரென உணர்ச்சி வசப்படுவார்கள் பேய் பிடித்தது போல் இருக்கும் என்று கூறுகின்றனர்.

இந்நிலையில் கலையரசன் வெளியே செல்லவே சுகன்யாவின் மனநிலை கொடூரமாக மாறி இருக்கிறது போலவும்,கொடூரமாக மாறிய சுகன்யாவின் மனநிலை தனது மகளையே தரதரவென்று இழுத்துச் சென்று குளிக்கும் அறைக்குள் குழந்தையை படுக்க வைத்து அறுவாமனையால் அறுத்து துடிதுடித்து கொன்றுள்ளார். ரத்தம் பீறிடவே சுகன்யா மயக்கம் அடைந்ததாகவும் மேலும் சுகன்யாவே தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

ரத்தம் பீறிட்ட நிலையில் மயங்கி விழுந்தார் சுகன்யா.இந்நிலையில் வெளியே சென்றிருந்த கலையரசன் வீடு திரும்பவே இருவரையும் தேடி உள்ளார். இருவரும் காணாத நிலையில் அதிர்ச்சி அடைந்துள்ளார். கழிவறையில் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ந்து போய் கதறி அழுந்துள்ளார்.

அருகில் உள்ளோர் போலீசாருக்கு விவரம் அளிக்கவே தண்டராம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளனர்.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுகன்யாவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அவரை மேல் தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து தன் மகளை கொடூரமாக கொன்ற சுகன்யாவின் மீது தன் கணவனான கலையரசனின் புகார் அளித்துள்ளார்.

 

போலீசார் சுகன்யாவின் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாபெரும் இந்தக் கொடூரச் சம்பவம் அங்கு உள்ள பகுதி மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.