Breaking News, Crime, District News

சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி சென்ற மர்ம கும்பல் !.. அச்சத்தில் பொது மக்கள்!..

Photo of author

By Parthipan K

சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி சென்ற மர்ம கும்பல் !.. அச்சத்தில் பொது மக்கள்!..

Parthipan K

Button

சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி சென்ற மர்ம கும்பல் !.. அச்சத்தில் பொது மக்கள்!..

நெல்லை சுத்தமல்லி அருகேவுள்ள கொண்டாநகரம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் தான் லட்சுமணன். இவருக்கு ஒரு மகன்  உள்ளான் பத்மநாதன். இவர் டவுனில்உள்ள ஒரு  பூக்கடையில் வேலை செய்து வருகின்றார்.இந்நிலையில் நேற்றிரவு  பத்மநாதன் வீட்டு முன்பு நின்று உறவினரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது  திடிரென்று முகமூடி அணிந்து கொண்ட மர்ம நபர்கள் ,அவரை சுற்றி வளைத்து நநின்று கொண்டார்கள்.பின் தன்னுடன் மறைத்து வைத்திருந்த அரிவாளால்  சரமாரியாக பத்மநாதனை  வெட்டினர். இதில் அவர்  இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார்.உடனே அங்கிருந்த மர்ம கும்பல்  தப்பி ஓடிவிட்டது. படுகாயம் அடைந்த பத்மநாதனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர்.

இதுகுறித்து சுத்தமல்லிகாவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விசாரணையில் முதல் கட்டமாக  முன்விரோதம் காரணமாக கொண்டாநகரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த சங்குமணி (28) என்பவரும், அவரது கூட்டாளிகள் 2 பேரும் சேர்ந்து பத்மநாதனை வெட்டியது தெரிய வந்தது. அதன் பேரில் 3 பேரை போலீசார்  வலை வீசி தேடி வருகின்றனர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

அரசு பேருந்தில் கடத்தப்பட இருந்த 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

அஜித்தின் 64 திரைப்படத்தின் புகைப்படம்! ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு!

Leave a Comment