மறைமுகமாக திணிக்கப்படும் தேசிய கல்விக் கொள்கை!! முதலில் 500 அரசு பள்ளிகளுக்கு குறி!!

Photo of author

By Gayathri

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் 500 அரசு பள்ளிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகள் தத்தெடுத்து அவற்றிற்கு தேவையான கட்டிட வசதி முதல் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என பேசி இருப்பது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் கோபமடைய செய்யும் விஷயமாக அமைந்திருக்கிறது.

தமிழக அரசின் இந்த முடிவு குறித்து பாஜக மற்றும் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். தமிழக அரசின் உடைய இந்த செயலானது தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக திணிப்பது போல் அமைந்திருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

இது குறித்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்திருப்பதாவது :-

2025 – 26 ஆம் கல்வி ஆண்டில் 500 அரசு பள்ளிகளை அருகில் இருக்கக்கூடிய தனியார் பள்ளிகள் தத்தெடுத்து அவற்றிற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், நிதிச் சுமையை காரணம் காட்டி ஏழை எளிய குழந்தைகளின் படிப்பை கேள்விக்குறியாக்குவது எந்த வகையிலும் சரியானதாக இருக்காது என்று தெரிவித்ததுடன், நிதிச் சுமையை காரணம் காட்டி அரசு பள்ளிகளை தனியார் மையம் ஆக்குதல் என்பது மறைமுகமாக தேசிய கல்விக் கொள்கையை திணிப்பதுடன், கல்வியை முழுவதுமாக தனியார் மையம் ஆக்குவதற்கான செயல்முறையாக இது அமைகிறது என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.