இந்திய அணியின் புதிய பயிற்ச்சியாளர்.. அணியில் நடக்க போகும் முக்கிய மாற்றங்கள்!! தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு பறிக்கப்படுமா!!
இந்திய அணியின் தலைமை பயிற்ச்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் நடந்து முடிந்த டி-20 உலக கோப்பையுடன் அவருடைய ஓய்வை அறிவித்தார். அதன் பின் புதிய பயிற்ச்சியாளரை தேர்வு செய்வதாகவும் அதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாமென்று BCCI அறிக்கை வெளியிட்டது. அதற்கு பல முன்னனி வீரர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். மேலும் BCCI-ம் பல முன்னனி வீரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியது. அதில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் , நியூசிலாந்து வீரர் ஸ்டீபன் பிளெமிங்,இந்தியாவின் WV ராமன், VVS லக்ஸ்மன் போன்றோர் இதில் அடங்குவர்.
மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீரிடமும் பேச்சு வார்த்தை நடத்தியது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் யாரென்ற குழப்ப நிலை நீடித்த போது BCCI கவுதம் கம்பீரை இந்திய அணியின் புதிய தலைமை பயிர்ச்சியாளராக அறிவித்தது. அவர் இந்திய அணிக்காக 2007ம் ஆண்டு நடைபெற்ற டி-20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் 75 ரன்களும் மற்றும் 2011ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் 97 ரன்களை குவித்தார். இவ்விரு உலக கோப்பையையும் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மேலும் IPL-ல் KKR அணிக்கு கேப்டனாக இருந்து 2 கோப்பையையும் மற்றும் அதே அணிக்கு ஓய்வு பெற்ற பிறகு ஆலோசகராகவும் இருந்து 1 கோப்பையை வென்றுள்ளார் அவர் ஒரு மிகச்சிறந்த வீரராவார்.
மேலும் கவுதம் கம்பீர் தான் பயிற்ச்சியாளராக வருவதற்கு முன் சில நிபந்தனைகளை முன்வைத்தார். வீரர்களை தேர்வு செய்வதில் தனக்கு முழு சுதந்திரம் தரவேண்டுமென்றும் மேலும் அணியில் சில மாற்றங்களை செய்வதற்கும் சுதந்திரம் தரவேண்டுமென்று கூறினார். அதற்கு BCCI ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
இந்நிலையில் தமிழக வீரர்களுக்கு இந்திய அணியில் போதிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. IPL-ல் சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன், நடராஜன், வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. அப்படி இருக்கையில் கவுதம் கம்பீர் அவர்கள் திறமையின் அடிப்படையில் தான் வீரர்களை தேர்வு செய்பவர். மேலும் நடராஜன் விளையாடியதை பலமுறை பாராட்டியுள்ளார் மற்றும் வருண் சக்ரவர்த்தி கடந்த IPL-ல் சிறப்பாக பந்து வீசி KKR அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். தற்போது இளம் வீரர்களை கொண்டு புதிய அணியை உருவாக்குவதில் தீவிரமாக உள்ளார் இதனால் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.