வரப்போகும் புதிய தலைவர்.. பறிப்போகும் அண்ணாமலை பதவி!! கறார் காட்டும் மோடி!! 

0
2111
The new leader who will come.. the post of Annamalai will be taken away!! Modi showing promise!!
The new leader who will come.. the post of Annamalai will be taken away!! Modi showing promise!!

வரப்போகும் புதிய தலைவர்.. பறிப்போகும் அண்ணாமலை பதவி!! கறார் காட்டும் மோடி!!

பாஜக எதிர்பார்த்த வகையில் தமிழகத்தில் களம் காண முடியவில்லை.இதே போல பல மாநிலங்களின் முடிவுகள் இருப்பதால் அந்தந்த தலைவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறுகின்றனர்.அந்த வகையில் பலரின் பதவி பறிபோக கூட அதிக வாய்ப்புள்ளதாம்.மேற்கொண்டு அண்ணாமலையையும் ராஜ்ய சபா வழியாக அமைச்சராக்க டெல்லி மேலிடம் ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கூட்டணி கலைவதற்கும் ஒரு இடத்தில் கூட பாஜக இடம் பிடிக்காமல் போனதற்கும் அண்ணாமலை மிக முக்கிய காரணம்.

அதுமட்டுமின்றி அரசியல் குறித்த இந்த மக்களவைத் தேர்தலில் சரியான செயல்பாடுகளும் இல்லை.இதனால் மேலிடத்திற்கு  தொடர்ந்து புகார் வந்த வண்ணமாகவே உள்ளது.இதன் காரணமாக அண்ணாமலை மாற்றப்படலாம் என கூறுகின்றனர்.அனைவரிடமும் ஒத்துப் போகும் புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என தகவல்களும் வெளியாகி உள்ளது.அந்த வரிசையில் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் மத்திய இணை அமைச்சராக இருக்கும் எல் முருகன் வரலாம் என்றும் கூறுகின்றனர்.

இவ்வாறு பதவி மாற்றம் செய்வது குறித்து டெல்லி மேலிடம் பெரும் அளவில் யோசனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.இதனிடையே ஒரு வட்டம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை தான் முதல்வர் என்று கூறுவதோடு அவரும் நாங்கள் அடுத்த தேர்தலில் கட்டாயம் ஆட்சியை நிலநாட்டுவோம் என்று கூறுகிறார்.இவாறன கருத்துக்களால் அண்ணாமலை பொதுவாக யாரிடமும் சுமுகமான முறையை கையாளுவதில்லை என பல குற்றச்சாட்டுகள் உள்ளது.பிரதமர் பதவியேற்பு-க்கு  பிறகு தான் நிர்வாகிகள் மாற்றம் குறித்து தகவல்கள் தெரியவரும்.