புதிதாக களமிறங்க கூடிய “ஸ்மார்ட் ரிங்”!! Boat  நிறுவனத்தின் அசத்தலான அட்வான்ஸ் மாடல்!!

Photo of author

By CineDesk

புதிதாக களமிறங்க கூடிய “ஸ்மார்ட் ரிங்”!! Boat  நிறுவனத்தின் அசத்தலான அட்வான்ஸ் மாடல்!!

CineDesk

The new "Smart Ring" that can be launched!! Amazing advance model from Boat!!

புதிதாக களமிறங்க கூடிய “ஸ்மார்ட் ரிங்”!! Boat  நிறுவனத்தின் அசத்தலான அட்வான்ஸ் மாடல்!!

உலகம் முழுவதும் தற்போது மின்னனுமயமாக மாறி வருகிறது. எனவே, மின்னணு சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்த டிஜிட்டல் வளர்ச்சியால் மக்களும் மாடனாக வாழ ஆரம்பித்துள்ளார்கள்.

இவ்வாறு வந்துவிட்ட இந்த மாடன் உலகத்திற்கு ஏற்றவாறு நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்களும் மாடனாக டிஜிட்டம் முறையாக மாற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டு தான் இந்த ஸ்மார்ட் வாட்ச். இது மார்க்கெட்டில் கொண்டு வரப்பட்ட சில நாட்களிலேயே மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த ஸ்மார்ட் வாட்சை சிறிய குழந்தைகள் முதல பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இளைஞர்கள் மத்தியில் இந்த ஸ்மார்ட் வாட்ச் வாங்குவது ஒரு கனவாகவே இருந்து வருகிறது.

இவ்வாறு மக்கள் மத்தியில் பெரியளவில் வலம் வந்த இந்த ஸ்மார்ட் வாட்சைத் தொடர்ந்து, அடுத்து புதியதாக ஸ்மார்ட் ரிங் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் இயர் பட்ஸ் மூலம் மிகவும் பிரபலமடைந்த Boat  நிறுவனமானது இந்த ஸ்மார்ட் ரிங்கை மார்க்கெட்டில் கொண்டு வர இருக்கிறது.

இந்த ஸ்மார்ட் ரிங் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அல்ட்ராஹுமன் என்னும் பிராண்ட் இது போன்ற ஸ்மார்ட் வளையங்களை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ள நிலலயில், அதனை பின்தள்ளி விட்டு போட் நிறுவனம் இந்த ஸ்மார்ட் ரிங்கை அறிமுகப்படுத்தி உள்ளது.

மேலும், இந்த ஸ்மார்ட் ரிங்கானது பீங்கான் மற்றும் உலோக கலவையால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ரிங் வாட்டர் ப்ரூப் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.