அடுத்த நெஞ்சுவலி இவருக்கு தான்!! அமலாக்கத்துறையினரின் அடுத்த டார்கெட்.. தயாராகும் நெக்ஸ்ட் அரஸ்ட்!
வருமான வரித்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய நபர்கள் என அனைவரது இடங்களிலும் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை என ஒன்று விடாமல் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போதும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இது குறித்து விசாரணைக்கு அவரை அழைத்த போது செந்தில் பாலாஜி முறையாக ஒத்துழைப்பு வழங்காததால் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அமலாக்கத்துரையினர் அவரை கைது செய்யும் முற்பட்ட பொழுது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட இருந்ததால் அவரை காவேரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேற்கொண்டு அவரை மருத்துவமனையில் வைத்து விசாரிக்கும்படி நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை கைப்பற்றிய ஆவணங்களில் முறைகேடுகள் இருப்பதால் இது குறித்து விசாரிக்க அவரது தம்பி அசோக் குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அவரது தம்பி மட்டுமின்றி அதில் தொடர்புடைய மேலும் ஒரு சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.அந்த வகையில் வருகின்ற 20ஆம் தேதி அமலாக்கத் துறையினர், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளனர். மேற்கொண்டு இவரும் செந்தில் பாலாஜியை போல விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால் கட்டாயம் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறுகின்றனர்.