அடுத்த நான்கு நாட்களுக்கு வெளுத்து வாங்கபோகும் கனமழை! எந்ததெந்த இடங்கள் தெரியுமா?

Photo of author

By Parthipan K

அடுத்த நான்கு நாட்களுக்கு வெளுத்து வாங்கபோகும் கனமழை! எந்ததெந்த இடங்கள் தெரியுமா?

Parthipan K

the-next-four-days-will-be-heavy-rain-do-you-know-any-places

அடுத்த நான்கு நாட்களுக்கு வெளுத்து வாங்கபோகும் கனமழை! எந்ததெந்த இடங்கள் தெரியுமா?

கடந்த மாதம் முதலில் இருந்த ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகின்றது.இந்நிலையில் தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.தற்போது வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவாகி உள்ளது.அதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேல் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வரும் 12ஆம் தேதி வடமேற்கு திசையில் புதுச்சேரி மற்றும் தமிழகம் கடற்கரை நோக்கி நகரவுள்ளது.குறிப்பாக இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை,ஆனாலும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு பரவலான பகுதிகளில் மிதமான முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைதொடர்ந்து இன்று தமிழகம் ,புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் ,தூத்துக்குடி ,ராமநாதபுரம் ,தஞ்சை,புதுக்கோட்டை ,சிவகங்கை ,திருவாரூர் ,நாகை ,மயிலாடுதுறை ,கடலூர் ,விழுப்புரம் ,சென்னை ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பாக சென்னை ,திருவள்ளூர் ,செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ,ராணிப்பேட்டை கடலூர் ,விழுப்புரம் ,மயிலாடுதுறை ,நாகை ,திருவாரூர் உள்ளிட்ட 14மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.