டிஜிட்டல் மோசடியின் அடுத்த கட்டம்!! Whatsapp பயனர்களை எச்சரிக்கும் சைபர் கிரைம் நிபுணர்கள்!!

Photo of author

By Gayathri

டிஜிட்டல் மோசடி என்பது பல வழிகளில் மோசடிக்காரர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பலர் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது இதன் அடுத்த கட்டமாக whatsapp மூலம் மோசடி செய்யும் புதிய திட்டத்தினை உருவாக்கி இருக்கின்றனர்.

இப்படிப்பட்ட மோசடிகளில் பொதுமக்கள் மற்றும் பயனர்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக சைபர் கிரைம் நிபுணர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இப்பொழுது whatsapp மூலம் வரக்கூடிய மோசடியானது, திருமண அழைப்பிதழ் போலவே ஒரு பைல் அனுப்பப்படுகிறது. ஆனால் உண்மையில் அது அழைப்பிதழ் கிடையாது என்றும், அதனைப் போலவே உள்ள தீங்கிழைக்கும் APK என்றும் தெரிவிக்கின்றனர். இதனால் தெரியாத நபர்களில் இருந்து ஏதாவது மெசேஜ் வந்தது என்றால் அதனை கிளிக் செய்து பார்க்க வேண்டாம் என்றும் பொதுமக்களை எச்சரிக்கை செய்துள்ளனர்.

டவுன்லோட் செய்யப்பட்ட பைல் மூலமாக சைபர் கிரிமினர்கள் பிறரின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் அவர்களுடைய டேட்டாக்களை திருடவும் முடியும் என்கின்றனர். எனவே உங்களது whatsappபில் திருமண அழைப்பிதழ் போன்று தெரியாத நம்பரில் இருந்து மெசேஜ் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் என்று சைபர் கிரைம் தெரிவித்திருக்கிறது.

மேலும், உங்களுடைய மொபைலில் எதையும் டவுன்லோட் செய்வதற்கு முன்பு அனுப்புனரையும் வந்திருக்கும் பைலையும் சரி பார்ப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் ஹிமாச்சல் பிரதேசத்தின் சிஐடி மற்றும் சைபர் கிரைம் துறையை சேர்ந்த மோகித் சாவ்லா எச்சரித்து இருக்கிறார்.

எனவே whatsapp பயணங்கள் தங்களுடைய எங்களுக்கு வரும் செய்திகளை சரி பார்த்த பின்னரே டவுன்லோட் செய்யுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.