அடுத்த அதிர்ச்சியாக இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு!

Photo of author

By Amutha

அடுத்த அதிர்ச்சியாக இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு!

Amutha

அடுத்த அதிர்ச்சியாக இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு!

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு மண்டலமான மலுகுவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் இன்று இந்திய நேரப்படி 3.07 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவில் 6.4 ஆக  பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தோனேசியாவின்  கிழக்கு மண்டலமான பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில்  இன்று (வியாழக்கிழமை) நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் சுமார் 39 கிலோமீட்டர் காலத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது.  சுனாமி எச்சரிக்கை  எதுவும் விடப்படவில்லை. 

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தினால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடல் பகுதியில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கத்தினால் கடலோரத்தில் இருந்த ஹோட்டல் ஒன்று இடிந்து விழுந்ததில் அதிலிருந்த நான்கு பேர் பலியாகினர். தற்போது இரண்டாவது முறையாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 42 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர். மீட்பு பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. அதிலிருந்து இன்னும் மக்கள் மீளாத நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் தீவுகளில் நில அதிர்வுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.

ஆப்கானிஸ்தான்,  இந்தியாவில் குஜராத் மற்றும் காஷ்மீரில் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.