கொரோனாவின் அடுத்த அலை! ஆய்வில் தகவல்!!

Photo of author

By Parthipan K

கொரோனாவின் அடுத்த அலை! ஆய்வில் தகவல்!!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பிறகு உலகின் பல நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வந்தது. அந்த வகையில் இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. அதன்பின் அது கட்டுக்குள் வரத் தொடங்கியது.

அதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருந்த நிலையில் அதன் உருமாறிய வைரசான டெல்டா வகை கொரோனா நாட்டில் மிக வேகமாக பரவி வந்தது. கொரோனாவை காட்டிலும் டெல்டா வகை கொரோனா மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனால் நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவானது. இந்த டெல்டா வகை கொரோனா வைரஸின் பாதிப்பை உணர்ந்த மக்கள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி வந்தனர். இதையடுத்து நாட்டில் நிலவி வந்த கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கொரோனாவின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவினாலும் கொரோனாவை போன்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இந்த ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவியது. இதையடுத்து நாட்டில் கொரோனாவின் மூன்றாவது அலை உருவானது. அதன்பின் அரசின் தீவிர நடவடிக்கையால் இந்த ஒமைக்ரான் வைரஸ் பரவல் சமீப நாட்களாக குறைந்து கொண்டு வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை முடிவுக்கு வந்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே நாட்டில் கொரோனாவின் நான்காவது அலை வருவதற்கு வாய்ப்புள்ளதா என்பதை அறிந்துகொள்ள நடத்தப்பட்ட ஆய்வில், நான்காவது அலைக்கு வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தென்கொரியா, சீனா, ஹாங்காங் உள்பட சில நாடுகளில் ஒமைக்ரான் வைரஸின் புதிய வடிவமான பி.ஏ-2 வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் நடத்திய ஆய்வில், ஒமைக்ரானின் புதிய வடிவம் காரணமாக அடுத்த அலை வரலாம் அல்லது வராமலும் போகலாம். ஆனால் புதிய அலை வந்தால் அது எப்போது வரும் என்பதை உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது.