மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! 20000 காலிப்பணியிடங்கள்!
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மத்திய அரசின் காலிப்பணியிடங்களை நிரப்ப இந்த போட்டி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.தமிழ்நாட்டில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பப்படும் இந்த பயிற்சி வகுப்புகள் யூடுப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றது.
கல்வி தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7மணி முதல் 9 மணி வரையிலும் ஒளிப்பரப்பு செய்யப்படும்.மேலும் இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணி முதல் ஒன்பது மணி வரை மறு ஒளிப்பரப்பு செய்யப்படுகின்றது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன.மேலும் உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் எனவும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குனர் கூறியுள்ளார்.