ரஷ்யா இதை செய்யுமானால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்! அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

0
65

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது.

ரஷ்யாவின் அசுர தாக்குதல் காரணமாக, உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் உருக்குலைந்துள்ளனர். மேலும் அந்த நாட்டின் பல முக்கிய நகரங்கள் ரஷ்யாவசம் சென்றுள்ளது.

இதற்கு நடுவே தொடர்ந்து போர் புரிந்து வரும் ரஷ்யாவிற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன். இந்தியாவைப் பொறுத்தவரையில் எப்போதும் போல தன்னுடைய நடுநிலை தவறாமல் செயல்பட்டு வருகிறது. உக்ரைன் அதிபர் கேட்டுக் கொண்டதன் பெயரில் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபரை தொடர்பு கொண்டு இந்த போரை நிறுத்துமாறு வலியுறுத்தினார்.

அதேபோல ரஷ்யாவுக்கு எதிராக ஐநா சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவுமில்லை எதிர்க்கவுமில்லை. அப்போதும் இந்தியா தன்னுடைய நடுநிலை தவறாமல் இருந்து கொண்டது.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றி தன்னுடன் இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக அந்த நாடு பொது வாக்கெடுப்பு நடத்துகிறது. இதில் அநேக மக்கள் ரஷ்யாவுடன் இணைவதற்கு விருப்பம் தெரிவிப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

நிலைமை இப்படி இருக்க உக்ரைனுடனான போரில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் பேரழிவை சந்திக்க நேரும் என்று அமெரிக்கா எச்சரிக்கை செய்திருக்கிறது.

இது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் தெரிவிக்கும் போது உக்ரைன் மீதான போரில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துமானால் ரஷ்யா பேரழிவை சந்திக்க நேரிடும். ரஷ்யாவிற்கு சரியான பதிலடியை அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் வழங்கும் என தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தன்னுடைய ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்கு அமெரிக்கா தன்னுடைய ஆதரவை தொடர்ந்து வழங்கும் என்று தெரிவித்தார். ஐநா சபையின் 77 வது பொது சபை கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக கூட்டின் வெளிப்படையான அணுசக்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில் ஐநா சபையின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையிலான போரை நிறுத்துமாறு ரஷ்யாவை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.