இந்தியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 61.9 லட்சமாக உயர்வு!

0
232
#image_title

இந்தியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 61.9 லட்சமாக உயர்வு!

2022 ம் ஆண்டில் இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 61.9 லட்சமாக உயர்ந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 15.2 லட்சமாக இருந்த நிலையில் தற்போது அது 61.09 லட்சமாக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு முன்பு 2019-ம் ஆண்டு 1.93 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை வந்துள்ளனர்.

இந்தியாவில் சுற்றுலா மூலம் பெறப்பட்ட அன்னிய செலாவணியாக 2021 ம் ஆண்டில் ரூ.65,070 கோடியும் 2022 ம் ஆண்டில் ரூ. 1,34,543 கோடியும் பெறப்பட்டுள்ளது.

166 நாடுகளின் மக்களுக்கு இ-சுற்றுலா விசா, இ-வணிக விசா, இ-மருத்துவ விசா, இ-மருத்துவ உதவி விசா மற்றும் இ-கான்பரன்ஸ் விசா ஆகிய 5 துணை வகைகளுக்கு இ-விசா வசதியை வழங்குதல் எளிமையாக்கப்பட்ட இ-விசா மற்றும் விசா கட்டணம் கணிசமாக குறைப்பு உள்ளிட்ட சுற்றுலாவை ஊக்கப்படுத்தவும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கும் சுற்றுலா அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.

Previous articleஹிந்தி பிரச்சாரக் சபாவை போல தமிழ் மொழியைப் பரப்ப தமிழ் பிரச்சார சபா அமைக்க மத்திய அரசு திட்டம்?
Next articleதமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு!!