கொரோனாவால் பாதித்தவர் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது! மூன்றாம் அலையின் ருத்ரதாண்டவம்!

0
145
The number of people affected by corona has crossed 3 crores! Rudrathanthavam of the third wave!
The number of people affected by corona has crossed 3 crores! Rudrathanthavam of the third wave!

கொரோனாவால் பாதித்தவர் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது! மூன்றாம் அலையின் ருத்ரதாண்டவம்!

கொரோனா தொற்றானது சீன நாட்டை பிறப்பிடமாக கொண்டிருந்தாலும் மற்ற நாடுகளிலும் அதன் தாக்கம் அதிகமாக தான் காணப்படுகிறது.முதல் அலையின் போது அமெரிக்கா, பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற நாடுகள் பெருமளவு பாதிப்பை சந்தித்தது.நமது இந்தியா சற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருந்ததால் முதல் அலையின் போது பெருமளவு உயிர் சேதங்கள் நடைபெறவில்லை.அதன் தாக்கமும் குறைவாகவே காணப்பட்டது.அதேபோல முதல் அலை முடிந்த பிறகு சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே சென்றனர்.

கொரோனா பரவல் பற்றிய தாக்கம் மக்கள் பெரிதளவு கண்டுகொள்ளாததால் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் நடந்துகொண்டனர்.அதன் விளைவாக இரண்டாம் அலையில் இந்தியா அதிகளவு பாதிப்படைந்தது.எந்த அளவிற்கு என்றால் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை தகனம் செய்ய கூட இடம் இல்லாமல் போய்விட்டது.தற்பொழுது இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து மீண்டும் சில தலர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அரசாங்கம் அனுமதி தந்துள்ளது.அதேபோல மக்கள் அனைவரும் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அரசாங்கம் தொடர்ந்து கொரோனா தடுப்பபூசி செலுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது.

தடுப்பூசி செலுத்திக் கொண்டாள் உயிர் போகும் என்ற அபாயம் ஏற்பட்டுவிடும் என அனைத்து மக்களிடமும் ஆரம்பகட்ட காலத்தில் ஓர் அச்சம் காணப்பட்டாலும் ,இரண்டாம் அலையில் நேர்ந்த உயிர் சேதங்களை கண்டு மக்கள் விழிப்புணர்வுடன் தடுப்பூசி போட முன் வந்துள்ளனர். இரண்டாம் அலை முடிவுற்ற நிலையில் தற்போது மூன்றாம் அலை கொரோனா தொற்று பரவும் என மருத்துவ ஆராய்ச்சியில் கூறியுள்ளனர்.இந்த மூன்றாம் அலையின் வீரியமானது அதிகமாக காணப்படும் என கூறுகின்றனர்.தற்போது நமது நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4.23 லட்சத்தை தாண்டியது.அதேபோல கொரோனா தொற்றின் பாதிப்பானது 3.19 கோடியை தாண்டியது.

தினசரி 24 மணி நேர கணிப்பு காலை நேரத்தில் வெளியிடப்படும்.அந்த வகையில் புதிதாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 204 ஆக உயர்ந்துள்ளது.அந்தவகையில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை மூன்று 19,98 158 உள்ளது.புதிதாக கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 373 என 24 மணி நேர கணக்கின்படி கூறியுள்ளனர். அதேபோல தொற்றில் இருந்து ஒரே நாளில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆயிரத்து 611 ஆக உள்ளது.தற்போது வரை பாதிப்படைந்த மூன்று லட்சத்து 88 ஆயிரத்து 508 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மூன்றாவது அலையின் தாக்கம் தற்போது சிறிதளவு காணப்பட்டாலும் நாளடைவில் அதிகளவு பரவக்கூடும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

Previous articleநாட்டையே உலுக்கும் நோய்த்தொற்று பரவல்! எங்கே தெரியுமா?
Next articleகன மழை பெய்ய இருக்கும் 9 மாவட்டங்கள்! பொதுமக்களே உஷார்!