7 வயது குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து முதியவர் செய்த செயல்! 3 மாதங்களாக சிறுவர்களும் உடந்தை!

Photo of author

By Hasini

7 வயது குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து முதியவர் செய்த செயல்! 3 மாதங்களாக சிறுவர்களும் உடந்தை!

தர்மபுரி அருகே நரசிங்கர் குளம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் 7 வயது மகளுடன் தங்கியுள்ளார். அவர் மனைவி வீட்டு வேலைக்கு சென்று வருகிறார். தந்தை கூலி தொழிலாளியாக உள்ளார். அந்நிலையில் இவர்களது 7 வயது மகள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

கூலி வேலை என்பதன் காரணமாக காலையிலேயே வெளியே சென்று விடுவார். இதே போல் தாயும் வேலைக்கு சென்று விடுவார். அதன் காரணமாக சிறிமி மட்டுமே வீட்டில் தனியாக இருப்பார். அந்த பகுதியை சேர்ந்த 74 வயது கூலி தொழிலாளியான பச்சையப்பன் இதை நன்கு தெரிந்து வைத்துக் கொண்டார்.

நாளடைவில் அந்த சிறுமியின் வீட்டிற்கு வருவதும் சிறுமியிடம் பேச்சு கொடுப்பதுமாக சென்று வந்துள்ளார். கணவன் மனைவி இருவரும் வேலைக்காக வெளியூர் சென்ற சமயங்களில் எல்லாம் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து, அதன் பிறகு நாளடைவில் பாலியல் தொல்லையும் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

அதற்கு உதவும் படி சாக்லேட் மற்றும் தின்பண்டங்களை வாங்கி கொடுத்து கடந்த மூன்று மாதங்களாக அந்த சிறுமியை அந்த முதியவர் உபயோகப் படுத்தி உள்ளார். மேலும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பத்து வயது சிறுவனையும், வீட்டுக் காவலுக்கு வைத்துவிட்டு சிறுமிக்கு இவ்வாறு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த கிழவன் இதற்காக ஒரு பத்து ரூபாயும், தின்பண்டங்களும் வாங்கிக் கொடுத்துவிட்டு, இந்த வேலையைத் தொடர்வது ஒரு வேலையாக இருந்துள்ளது.

சிறுமியின் பெற்றோர் அல்லது அக்கம் பக்கத்தினர் யாராவது வந்தால் சத்தம் போடும் படி  சிறுவனிடம் தெரிவித்துள்ளார். அதன்படி சிறுவனும் வீட்டிற்கு வெளியே காவல் காக்க இந்த கிழவன் வீட்டிற்குள் சென்று சிறுமியிடம் அத்துமீறி நடந்து உள்ளான். இதற்கிடையே இந்த விஷயம் அந்த பகுதியை சேர்ந்த வேறு ஒரு பதிமூன்று வயது சிறுவனுக்கும் தெரியவந்தது.

எனவே அவனும் அவனுடைய பங்குக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து செல்போனில் சில தேவை இல்லாத படங்களை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இவ்விருவருமே ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் என மாறி மாறி பாவம் அந்த குழந்தையை சித்திரவதை செய்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாகவே இந்த கொடூர சம்பவம் தொடர்கதையாக அரங்கேறியுள்ளது. இந்நிலையில் சிறுமியின் உடல்நிலை கடந்த 3 நாட்களாக மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது. அதன் காரணமாக சிறுமியின் பெற்றோர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமியின் சிறுநீர் குழாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்து பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளனர்.

அதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது போலீசார் சிறுமியிடம் விசாரித்தபோது, அந்த சிறுமி தன்னை மூன்று மாதங்களாக இப்படி ஒரு முதியவரும் 13 வயது சிறுவனும் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளனர் என்று கூறி மேலும் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து, விடுவேன் என மிரட்டியதாகவும் அழுது கொண்டே கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் சிறுமியை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 74 வயது கிழவன் மற்றும் 13 வயது சிறுவன் மற்றும் பாதுகாப்புக்கு பயன்படுத்திய 10 வயது சிறுவன் மூவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்கள் மூவருமே தற்போது தலைமறைவாக உள்ளனர். இந்த ஏழு வயது சிறுமியை சீரழித்த சம்பவம் தர்மபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.