தலையில் பலத்த காயம் !அழுகிய தலை! கேட்பாரற்று கிடக்கும் முதியவர்!

0
140

தலையில் பலத்த காயம் !அழுகிய தலை! கேட்பாரற்று கிடக்கும் முதியவர்!

மதுரையில் அழுகிய தலையுடன் இருந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூரில் அம்பேத்கர் பகுதியில் வாழ்ந்து வந்தவர் ஒரு முதியவர் அவர் பெயர் தண்டபாணி. 55 வயது மதிக்கத்தக்க அந்த முதியவர் அம்பேத்கர் நகரில் பல வருடங்களாக வசித்து வந்துள்ளார்.

அவருக்கு குடும்பத்தினர் யாரும் கிடையாது. உறவினர்களும் யாரும் கிடையாது. அம்பேத்கர் நகரின் அருகில் உள்ள தறி நெய்யும் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டு, அக்கம்பக்கத்தினர் தரும் உணவையும் உட்கொண்டு விட்டு திண்ணையில் படுத்து உறங்கிக் காலத்தை கழித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே கொரோனா முடக்கத்தால் ஊரடங்கு விதிக்கப்பட்டதால் அனைத்து தறி நெய்யும் கம்பெனியும் மூடப்பட்டுள்ள நிலையில் அவர் வேலை ஏதும் இல்லாத காரணத்தினால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையிலும் அக்கம்பக்கத்தினர் அவருக்கு உணவளித்து கொண்டு தான் வந்திருக்கின்றனர்.

கடந்த இரு வாரத்திற்கு முன்பாக முதியவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அவர் தலையில் பயங்கர காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அவர் யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார்.

இந்நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல செல்ல யாரும் இல்லை என்பதாலோ தெரியவில்லை அவர் யாரிடமும் இதை சொல்லாமலே வைத்து இருந்திருக்கிறார்.

இந்நிலையில் காயம் பெரிய அளவில் பிரச்சினைக்கு உள்ளாகி அந்த பகுதி மட்டும் அழுகி நீர் வடிந்து வந்துள்ளது.

இதனால் முதியவருக்கு அருகில் சென்றாலே துர்நாற்றம் வீசுவதால் மக்கள் யாரும் அவரிடம் செல்வதையும் உணவு கொடுப்பதையும் தவிர்த்து விட்டனர்.

இதை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் அவரை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதை தொடர்ந்து மற்றும் அருகில் உள்ள காவல் துறையினர் இடமும் இதயம் தொண்டு நிறுவனத்திடமும் விவரத்தை தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த இதயம் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சிவக்குமார் மற்றும் அவரது குழுவினர் முதியவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து பக்கத்தில் இருந்து பார்த்து வருகின்றனர்.

அவர் காயம் பட்டதை வேறு யாரிடமாவது சொல்லி இருந்தால் இவ்வளவு தூரம் வந்து இருக்காது என்று மக்கள் கவலை தெரிவித்தனர் .

Previous articleராமர் கோயிலின் பூமி பூஜைக்காக புனிதநீர் மற்றும் பூக்கள் இமயமலையிலிருந்து வரவழைப்பு!!
Next articleபுது சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்! அண்ணா பல்கலைக்கழகம்