முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க சக்தி கொண்டது. முருங்கை சாப்பிட்டு வர சிறுநீரகம் பலப்படும் தாதுவும் பெருகும்.
முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றது.
குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டு வர மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும், மலச்சிக்கலால் அவதி படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சளி பிரச்சனை உள்ளவர்கள், ரத்தசோகை, வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் முருங்கைக்காய் சாப்பிடலாம்.மேலும் இந்த நோய்கள் அனைத்திற்கும் சிறந்த மருந்தாக அமைகின்றது.