குறட்டை வராமல் நிம்மதியாக தூங்க ஒரே தீர்வு!! 

0
142

குறட்டை வராமல் நிம்மதியாக தூங்க ஒரே தீர்வு!!

அனைவருக்கும் மிகப் பிடித்தமான ஒன்று தூக்கம். அந்த தூக்கம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால் அந்த தூக்கத்தின் போது அருகில் இருப்பவர்கள் குறட்டை விடுவதால் அவர்களின் தூக்கம் கலைந்து விடுகிறது. இது சில சமயங்களில் பெரிய பிரச்சனையில் கொண்டு போய் விடும். ஒருவருக்கு குறட்டை உண்டாகிறது என்றால் அவர்கள் அதிக அளவு சோர்வடைந்தால் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது மிகவும் தவறான கருத்து. நம் சுவாசிக்கும் பாதையில் மென் திசுக்கள் உள்ளது.

அந்த மின் திசுக்கள் ஆனது வீக்கம் அடைந்தால் அச்சமயத்தில் நாம் சுவாசிக்கும் பொழுது காற்று உள்ளே செல்லும். வீக்கத்துடன் காற்றும் சேர்ந்து செயல்படுவதால் அதன் அதிர்வு தான் குறட்டையாக வெளிப்படுகிறது.

இதனை சரி செய்ய தற்பொழுது மருந்து மாத்திரை என்றெல்லாம் வந்துவிட்டது. ஆனால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இதனை எளிதில் குணப்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

மஞ்சள் தூள்

ஏலக்காய்

தேன்

செய்முறை

ஒரு டம்ளர் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதனை அடுப்பில் வைத்து நம் எடுத்து வைத்துள்ள கால் ஸ்பூன் மஞ்சள் சேர்க்க வேண்டும்.

பின்பு இரண்டு அல்லது மூன்று ஏலக்காயை தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டும் ஒன்றாக சேர்ந்து 50 மில்லி அளவுக்கு வரும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்பு இதனை வடிகட்டி சுவை ஏற்ப தேன் சேர்த்து குடிக்கலாம். இவ்வாறு குடித்து வர உங்கள் குறட்டை இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகும். குறட்டை மட்டுமின்றி சளி பிரச்சனைக்கும் இது மருந்தாக பயன்படும்.

Previous articleஇனி உங்களுக்கும் பரம்பரைக்கும் தைராய்டு பிரச்சனை வராது!! 
Next articleஇதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!! 10 நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும்!!