குழந்தைகள் விரல் சூப்புவது தடுக்க ஒரே வழி! இதை மட்டும் செய்யுங்கள்!

0
223

குழந்தைகள் விரல் சூப்புவது தடுக்க ஒரே வழி! இதை மட்டும் செய்யுங்கள்!

குழந்தைகள் பெரும்பாலும் மூன்று முதல் நான்கு மாதங்களிலேயே கை சூப்ப பழகிக் கொள்கின்றனர். இவ்வாறு பழகும் ஒரு செயல்தான் ஒரு வயது முதல் ஐந்து வயது வரை விடுவதில்லை.

இதற்காக பெரும்பாலும் பெற்றோர் தேன் நிப்பிள் போன்றவற்றை கொடுத்து பழகுகின்றனர். ஆனால் அதுவும் ஒரு தவறான விஷயம்தான். மேலும் ஒரு சிலர் வேப்ப எண்ணையை வாங்கி கைகளில் தடவி விடுகின்றனர்.

இவ்வாறு அனைத்தும் கொடுத்து பயனளிக்காதவர்கள் இதனை பின்பற்றினால் போதும். சில நாட்களிலேயே குழந்தைகள் விரல் சூப்புவதை விட்டுவிடுவார்கள். இவ்வாறு கை சூப்பும் குழந்தைகள் உணவுகளையும் சரியாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

முடிந்த அளவிற்கு குழந்தைகளின் கைகளில் கையுரையை மாற்றிவிட வேண்டும். இதற்கு அடுத்தபடியாக குழந்தைகள் எப்பொழுது எல்லாம் கையை வாயில் வைக்கிறதோ அப்பொழுதெல்லாம் சலிப்பு தட்டாமல் அவர்கள் கையை வாயிலிருந்து வெளியே எடுத்து விட வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர கட்டாயம் குழந்தைகள் அதை மறந்து விடுவார்கள். அதேபோல குழந்தைகள் தனியாக விடும் பொழுது ஏதேனும் பொருள்களை வைத்து விளையாடிக்கொண்டே கையை சப்புவது வழக்கம்.

முடிந்த அளவிற்கு அவர்களுடன் நாம் நேரம் செலவிடும்பொழுது இந்த பழக்கத்தை மறக்க வைக்கலாம். இதுவே பெரிய குழந்தைகளாக இருக்கும்பொழுது அவர்களுக்கு இது பற்றி அவர்களுக்கு புரியும் படி எடுத்துரைக்க வேண்டும்.

பல் சீரமைப்பு மாறுபடும் என்று கூறி கூட அவர்களுக்கு புரிய வைக்கலாம். இல்லையென்றால் கற்றாழை ஜெல் தினம்தோறும் இரவும் அவர்கள் தூங்குவதற்கு முன் கை விரலில் தடவி விடலாம்.