மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
அக்டோபர் மாதம் முதலில் இருந்தே அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகின்றது.அதனால் அனைத்து நீர்நிலைகளிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மருது சகோதர்களின் நினைவு தினம் இன்று காளையர் கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் சமுதாய மக்கள் என ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
மருதுபாண்டியர்களின் 221வது குருபூஜையை முன்னிட்டு இன்று சிவகங்கை ,தேவகோட்டை,இளையான்குடி, மானாமதுரை,காளையார் கோவில்,திருவப்புவனம்,திருப்பத்தூர் தாலுக்காவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் வரும் அக்டோபர் 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதனால் இன்று ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்ய தொடங்கியுள்ளது.
அதனால் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகின்றது.அதன் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.