மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் வெளியிட்ட உத்தரவு! இனி இந்த மாத்திரை விற்க தடை!
மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் உத்தரவு ஒன்றை பிறபித்துள்ளது.அந்த உத்தரவில் மன நல மருந்துகள் மற்றும் தூக்க மருந்துகள் முறையாக பயன்படுத்தபடுகின்றதா இல்லை வேறு ஏதேனும் தவறான பயன்பாட்டுக்கு விற்பனை செய்யபடுகின்றதா என்பதனை கண்காணிக்க சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் சில்லறை மற்றும் மொத்த மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திடீர் சோதனை நடத்தினார்கள்.
அந்த சோதனையில் சென்னை,திருவான்மியூர் கடற்கரை சாலையில் உள்ள ஒரு மருந்து கடையில் வலி நிவாரணி மருந்துகள் ரசீதுகள் இல்லாமல் பெருமளவில் விற்பனை செய்யபடுகின்றது என கண்டுபிடிக்கப்பட்டது அதனால் அந்த கடைக்கு புலானாய்வு பிரிவு,மருந்துகள் ஆய்வாளரால் அந்த மருந்துக் கடைக்கு வருவாய் ஆய்வாளர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
மேலும் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் விற்பனை செய்யவில்லை என்றால் அந்தக் கடையின் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.அந்த கடையின் உரிமமும் ரத்து செய்யப்படும்.தமிழகத்திலுள்ள அனைத்து சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள்,தூக்க மருந்துகள் மற்றும் மன நோய் மருந்துகளின் தவறான பயன்பாட்டைத் தடுக்க மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.மேலும் அதற்கான உரிய ரசீது வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.