அரசு வெளியிட்ட உத்தரவு! அனைத்து மருத்துவமனைகளிலும் இனி இவை கட்டாயம்!
மருத்துவக் கல்வி இயக்குநர் அனைத்து மருத்துவக் கல்லுரி மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.அதில் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றை எதிர்கொள்ள தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக வெண்டிலேட்டர்,ஆக்சிஜன் கட்டமைப்பு,மருந்துகள் ,படுக்கை வசதி போன்றவைகள் தேவையான அளவு ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும்.சீனா,ஜப்பான், தென்கொரியா உள்பட 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் பிஎப் 7 வகை கொரோனா தொற்று அதிகளவு பரவி வருகின்றது.மத்திய மாநில அரசுகள் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் ,ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட சுகாதார நிலையங்களுக்கும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு தேவையான உபகரணங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.கையிருப்பு இல்லை எனில் உடனடியாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திடம் தெரிவித்து உடனடியாக பெற்று கொள்ள வேண்டும்.
மேலும் மருத்துவமனையில் அவசர உதவிக்கு தேவையான பொருட்கள் இருகின்றதா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள்,மருத்துவ மாணவர்கள் ,செவிலியர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதுக்காப்பாக இருக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்றாக உள்ளது.அனைவரும் தடுப்பூசியை தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும்.
மேலும் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் பொது சுகாதாரத் துறை கூறுகையில் கொரோனா பரிசோதனை, நோய் பரவல் கண்டறிதல்,சிகிச்சை,தடுப்பூசி, நோய் தடுப்பு விதிகளை கடைபிடித்தல் என அனைத்தையும் கவனத்தில் கொண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும்.
அதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளும் தங்களது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் சளி மாதிரியை அரசின் மரபணு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.