வலியில் துடித்த கர்ப்பிணியை தொட்டிலில் தூக்கி சென்ற அவலம்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி!!

வலியில் துடித்த கர்ப்பிணியை தொட்டிலில் தூக்கி சென்ற அவலம்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி!!

போதிய சாலை வசதி இல்லாததால் நிறை மாத கர்ப்பிணியை தொட்டிலில் சுமந்தவாறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவலம் திருப்பூர் அருகே நிகழ்ந்துள்ளது.திருப்பூர் மற்றும் அமராவதி வனசகத்திற்குட்படட பகுதிகளில் போதிய சாலை வசதிகளின்றி மக்கள் அள்ளல்பட்டு வருகின்றனர்.இங்கு சாலை வசதிக்கோரி பலதரப்பட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் எவ்வித பயனும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் பிரசவ வலியில் துடித்த நிறை மாத கர்ப்பிணி பெண் ஒருவரை அப்பகுதியை சேர்ந்த மக்கள் தொட்டிலில் சுமந்தவாறு மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.வைரலாகி வரும் இந்த காட்சி கான்போரை கண்கலங்க செய்கிறது.