கோடை காலத்தில் அச்சுறுத்தும் ஹீட் ஸ்ட்ரோக் – பாதுகாப்பது எப்படி?

0
136
#image_title

கோடை காலத்தில் அச்சுறுத்தும் ஹீட் ஸ்ட்ரோக் – பாதுகாப்பது எப்படி?

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக தமிழக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதுமட்டுமல்ல குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாமெனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கொளுத்தும் கோடை வெயிலில் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாம். அளவுக்கு அதிகமான வெப்பத்தை நமது உடலால் தாங்க முடியாமல் போகும்போது இந்த ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இது சில சமயங்களில் நம் உயிருக்கே கூட ஆபத்தாக முடியும் என்று கூறப்படுகிறது.

பொதுவாக நமது உடல் வெப்பநிலை 98.6 பாரான்ஹீட் 37 டிகிரி செல்சியஸாக இருக்கும். அதுவே கோடை வெயிலில் நாம் வெளியே செல்லும்போது அதிக நேரம் வெயிலில் இருப்பது உடல் வெப்பநிலை 104 டிகிரி பாரான்ஹீட்டுக்கு மேலே செல்லும்போது இந்த ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது.

இதற்கான சில அறிகுறிகள் உள்ளன. அதாவது, உயர் அல்லது குறைந்த ரத்த அழுத்தம், வாந்தி குமட்டல், மயக்கம், வலிப்பு, வேகமாக மூச்சு விடுவது, உணர்வு இழப்பு மற்றும் குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுவது போன்ற சில அறிகுறிகள் உள்ளன. இதை சரியாக கவனித்தால் ஆரம்பத்திலேயே ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து தப்பலாம்.

மேலும் இது வராமல் தடுக்க வழக்கமான நாட்களை விட அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும். சூடான பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சேர்த்து கொள்ளலாம். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல உச்சி வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.