சிகிச்சை பெற வந்த நோயாளி செவிலியர்களிடம் தகராறு!.. போதை ஆசாமிகளின் அட்டுழியம் ?.

0
219
The patients who came for treatment had a dispute with the nurses!
The patients who came for treatment had a dispute with the nurses!

சிகிச்சை பெற வந்த நோயாளி செவிலியர்களிடம் தகராறு!.. போதை ஆசாமிகளின் அட்டுழியம் ?.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே வெள்ளையம் பலம் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை செயல் பட்டுவருகிறது.இங்கு தினம் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில்  காப்புக்காடு பகுதி மங்காட்டான் விளை என்ற இடத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு  சிகிச்சை பெற வந்தனர்.

அப்போது அவருடன் சேர்ந்து  அதே பகுதி இருக்கும் அஜித் மற்றும் அபிஷ் என்பவர்களுடன் வந்திருந்தார்கள்.அப்போது அவர்கள் இருவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.உள்ளே மருத்துவர்கள் கண்ணனுக்கு சிகிச்சை கொடுத்து கொண்டிருந்தார்கள்.மது போதையில் உள்ள  நபர்கள் மருத்துவமனை  செவிலியர்களிடம் வம்பிழுக்கும் வகையில் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

இதை கண்ட  மருத்துவமனையின்  காவலாளி மனோகரன் என்பவர்  அவர்களை தட்டிக் கேட்டுள்ளார்.இதனால் ஏற்பட்ட தகராறில் அஜித், அபிஷ் ஆகியோர் காவலாளி மனோகரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காயமடைந்த மனோகரன் அதே  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பான மருத்துவமனை உரிமையாளர் ஆல்வின்லால் என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் முனுமுனுப்பு ஏற்பட்டது.

Previous articleலாரியின் மீது அரசு  பேருந்து மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!  
Next articleஇது இல்லையென்றால் என்னால் இருக்க முடியாது! அந்த இடத்தில் வெட்டிய சைக்கோ கணவன்!