உச்சம் பெறும் கொரோனா பாதிப்பு! அரசு வெளியிட்ட தகவல்!

0
216
The peak of the corona virus! Information released by the government!
The peak of the corona virus! Information released by the government!

உச்சம் பெறும் கொரோனா பாதிப்பு! அரசு வெளியிட்ட தகவல்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதன் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பள்ளி மற்றும் கல்விகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் பொது தேர்வுகளும் போட்டி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.

தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிப்படைந்தது. அனைத்து பகுதிகளுக்குமான போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் மீண்டும்  அவரவர்களின்  இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மீண்டும் செயல்பட தொடங்கியது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா மீண்டும் எழுச்சி பெற தொடங்கியது. அதனால் சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டது. மேலும் ஓரளவு கொரோனா பரவல் குறைந்த நிலையில் தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. அதனால் பொது மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இரண்டு மாதங்களுக்கு முன்பு 2  தொற்று பாதிப்பு தற்போது 100 ஐ தாண்டியுள்ளது. இதனால் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பதற்றப்பட வேண்டாம் என பாதுகாப்போடு இருப்பது மிக அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇன்று தமிழகம்  முழுவதும் விடுமுறை! அரசு அலுவலகங்கள் இயங்காது!
Next articleரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இனி இந்த பொருள் இரண்டு கிலோ வழங்கப்படும்!