அதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தை பொருட்படுத்தாமல் செல்லும் ஊர் மக்கள்!!

Photo of author

By Parthipan K

அதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தை பொருட்படுத்தாமல் செல்லும் ஊர் மக்கள்!!

Parthipan K

அதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தை பொருட்படுத்தாமல் செல்லும் ஊர் மக்கள்!!

 

கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை மற்றும் கன மழை பெய்து வந்தது.அதன்படி தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.இந்நிலையில் கனமழை காரணமாக தருமபுரி கம்பைநல்லூர் வழியே பாயும் சனக்குமார் நதியில் வரலாறு காணாத அளவுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கெலவள்ளி கிராமம் அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் அங்குள்ள தடுப்பணையை மீறி வெள்ளம் தலைபுரண்டு ஓடுகிறது. வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் வாகனங்கள் அந்த வழியே செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.ஆனால் அதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி ஒரு சில வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் மூழ்கியுள்ள தரைப்பாலத்தின் மீது பயணிக்கின்றனர்.அவர்களை தொடர்ந்து சிறுவர்களும் ஆபத்தை பொருட்படுத்தாமல் மிதிவண்டியில் அவ்வழியே செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.