ராணுவவீரரையே ஏமாற்றி சீட்டு பணம் பறித்த நபர்! ராணுவ உடையுடனே போலீசில் புகார்

0
148

ராணுவ வீரரிடம் சீட்டு பணத்தை கொடுக்க மறுத்து ஏமாற்றிய நபர் மீது அந்த ராணுவ வீரரே சீருடையுடன் வந்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வாலாஜாபேட்டை பகுதியில் உள்ள திருத்தணி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சரத்குமார். இவருக்கு வயது 29. இவர் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த குரு என்பவரிடம் 2016 ஆம் ஆண்டு முதல் 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஏலச்சீட்டு கட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

 The person who cheated the Army soldier's Chit-fund money!  Report to police in military uniform

The person who cheated the Army soldier’s Chit-fund money! Report to police in military uniform

வேலை சீட்டு முடிவடைந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், தனக்கு வரவேண்டிய சீட்டு பணத்தினை கொடுக்காமல் இவ்வளவு நாட்கள் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

இதனை பலமுறை கேட்டும் சரியான பதில் கிடைக்காததால், ராணுவ வீரரான சரத்குமார் தனது ராணுவ சீருடை அணிந்தவாறே மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளார். ஏமாற்றிய தனது சீட்டுப் பணத்தை மீட்டுத் தரக்கோரி ராணுவ உடையுடனே புகார் அளித்த சம்பவம் அந்தப் பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

Previous articleதமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்:? முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டுகோள்!
Next articleதோனியின் ஈடு இணையற்ற பங்களிப்பை மறக்க முடியாது