தோனியின் ஈடு இணையற்ற பங்களிப்பை மறக்க முடியாது

0
171

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல இந்தியாவில் கடந்த மே மாதமே நடக்க இருந்த ஐ.பி.எல் போட்டிகள் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவீரமாக பரவி வருவதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய நட்சத்திர வீரர் மற்றும் இந்திய அணியின் முன்னால் கேப்டனுமான டோனி தன்னுடைய ஓய்வை அறிவித்தார் இதனால் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது  மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டோனி பற்றி கூறும்போது உலக கிரிக்கெட் இனி ஹெலிகாப்டர் ஷாட்டுகளை நாம் பார்க்க முடியாது இந்திய கிரிக்கெட்டில் தோனியின் ஈடு இணையற்ற பங்களிப்புக்காக, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான அவரது கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறினார்.

Previous articleராணுவவீரரையே ஏமாற்றி சீட்டு பணம் பறித்த நபர்! ராணுவ உடையுடனே போலீசில் புகார்
Next articleநீதிமன்றங்களை திறக்க பார் கவுன்சில் சார்பாக கோரிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here