கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்த நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்கிற பாலகிருஷ்ணன் (25) பணியாற்றி வந்துள்ளார். ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் வழக்குபதிவு செய்து பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் ஒருவரை கைது செய்தனர். இதனையடுத்து பாலாஜியை வங்கி நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்தது.
அவர்கள் மீது சந்தேகம் எழுந்த நிலையில், காவல்துறையினர் வங்கி நிர்வாகம் அடகு வைத்த நகைகளை மறுதணிக்கை செய்தது.
அப்பொழுது சுமார் 34 வாடிக்கையாளர்களின் பெயரில் பாலாஜியை போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்தது அம்பலமானது.
மேலும், இதுகுறித்து வங்கி மேலாளர் கருங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.