மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய நபர் கைது!

0
223
the-person-who-threatened-the-student-by-taking-a-naked-video-was-arrested
the-person-who-threatened-the-student-by-taking-a-naked-video-was-arrested

மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய நபர் கைது!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் விடுமுறை அறிவித்திருந்தது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வந்தது. இதில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் ludo என்ற கேம் ஒன்றை டவுன்லோட் செய்து விளையாடி உள்ளார். அதில் விக்னேஷ் என்ற   நபர் அறிமுகமாகியுள்ளார்.

இவர் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த டிப்ளமோ பட்டதாரி இவரின் பெயர் விக்னேஷ். இவரும் ludo விளையாடும் பழக்கம் உடையவர். இதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவியும் விக்னேஷும் நட்போடு பழகி வந்தனர். நாட்களில் இருவரும் செல்போன் என்னை பரிமாறிக் கொண்டு சமூக வலைதளங்களில் நட்பாக பேசி வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர். இந்தப் பழக்கம் ஆபாச உரையாடலாக மாறியது. மேலும் இந்த சிறுமியை மிரட்டி ஆபாசமாக வீடியோ காலில் பேச வலியுறுத்தியுள்ளார் விக்னேஷ். சிறுமியும் அவ்வாறு செய்த நிலையில் அதையும் வீடியோவாக எடுத்துள்ளார். பின் ஒரு நாள் சிறுமி தனியாக இருக்கும்போது வீட்டிற்குச் சென்று மிரட்டி அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு நாள் சிறுமியின் பெற்றோர் அந்த மொபைலை எடுத்து பார்த்தபோது திடுக்கிடும் அதிர்ச்சி ஏற்பட்டது. அச்சிறுவியின் மொபைல் போனில் விக்னேஷ் அனுப்பிய ஆபாச குறுஞ்செய்தியை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிறுமியின் பெற்றோர் விக்னேசை தொடர்பு கொண்டு பேசிய போது சிறுமியின் ஆபாச வீடியோக்கள் என்னிடம் இருப்பதாகவும் ஒரு வீடியோவிற்கு 25 ஆயிரம் விதம் 50 லட்சம் பணம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

அதேபோல்  பணத்தை தர விட்டால் சிறுமியின் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் பணம் அனுப்ப தன் ஜிபே என்னையும் கொடுத்துள்ளார். இச்சம்பவத்தை குறித்து சிறுமியின் பெற்றோர் ஆவடி மாநகர துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அங்கு மொபைல் எண்ணை வைத்து செங்கல்பட்டு கொல்லைமேடு பகுதியில் பதுங்கி இருந்த விக்னேசை கைது செய்தனர்.

கைது செய்த விக்னேசை  விசாரித்த போது lanet romeo ஓரினச் சேர்க்கை ஆப் மூலமாக சந்திக்கும் பெண்களை தாக்கி பணம் பறிக்கும் வழக்கில் விக்னேஷ் சென்று வந்ததை கண்டுபிடித்தனர். சிறையில் இருந்து வெளிவந்த விக்னேஷ் செங்கல்பட்டு சென்று வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து இந்த ஆப்பை மீண்டும் செயல்படுத்தி வந்துள்ளார்.

எனவே விக்னேசை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். மேலும் பெற்றோர் அனைவரும் தன் பெண் பிள்ளைகளை எச்சரித்து வளர்க்க  வேண்டும் என காவல்துறையினர் வலியுறுத்துகின்றனர்.

Previous articleசேலம் மாவட்டத்தில் மாமனார் வீட்டிற்கு சென்ற மனைவியை காணவில்லை? கணவர் போலீசாரிடம் புகார்!
Next articleஈரோடு மாவட்டத்தில் ஏரிக்குள் பாய்ந்த லாரி! அப்பகுதியில் பரபரப்பு!